மீண்டும் உலகசாதனை படைத்த பாபர் அசாம் – ஆனால் ரூல்ஸ்சை மீறியதால் களத்திலேயே தண்டனை வழங்கிய அம்பயர்

babar azam
- Advertisement -

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முல்தானில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஜூன் 8-ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் பாபர் அசாம் அபார சதமடித்து 103 ரன்கள் விளாசியதால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் 1 – 0* என தொடரில் முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2-வது போட்டி ஜூன் 10-ஆம் தேதியான நேற்று முல்தானில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 275/8 ரன்கள் சேர்த்தது.

அந்த அணியின் தொடக்க வீரர் பாகர் ஜமான் 17 (28) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் மற்றொரு தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் உடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தனது அணியை மீட்டெடுத்தார். இதில் 72 ரன்கள் எடுத்திருந்த போது இமாம்-உல்-ஹக் ஆட்டமிழக்க அடுத்த சில ஓவர்களில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 77 (93) ரன்கள் எடுத்திருந்த கேப்டன் பாபர் அசாம் அவுட்டானார்.

- Advertisement -

பாகிஸ்தான் வெற்றி:
நடுவரிசையில் முஹம்மது ரிஸ்வான் 15 (23) ஹாரிஸ் 6 (6) நவாஸ் 3 (5) என சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கடைசியில் சடாப் கான் மற்றும் குஷ்தில் ஷா ஆகியோர் தலா 22 ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அகில் ஹொசைன் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 276 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு கடந்த போட்டியில் சதமடித்த சாய் ஹோப் 4 (6) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மற்றொரு தொடக்க வீரர் கெய்ல் மேயர்ஸ் 33 (25) ரன்களும் சமர் ப்ரூக்ஸ் 42 (56) ரன்களும் எடுத்து வெற்றிக்காகப் போராடி ஆட்டமிழந்தனர்.

ஆனால் மிடில் ஆர்டரில் பிரண்டன் கிங் 0 (2) கேப்டன் நிக்கோலஸ் பூரன் 25 (36) ரோவ்மன் போவல் 10 (10) என முக்கிய வீரர்கள் அதிரடியை காட்டாமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். இறுதியில் அகில் ஹொசைன் 14* (21) ரன்கள் எடுத்த போதிலும் எதிர்புறம் வந்த வீரர்கள் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 32.2 ஓவரில் 155 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் சுருண்டது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது நவாஸ் 4 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

ரூல்ஸ் தெரியாத பாபர்:
அதனால் 120 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை சுவைத்த பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2 – 0* என்ற கணக்கில் இப்போதே கைப்பற்றியுள்ளது. முன்னதாக இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது 29-வது ஓவரில் பீல்டிங் செய்து கொண்டிருந்த கேப்டன் பாபர் அசாம் தெரியாத தனமாய் விக்கெட் கீப்பர் முஹமது ரிஸ்வான் பயன்படுத்தும் கையுறைகளில் ஒன்றை எடுத்து தனது கையில் போட்டுக்கொண்டு பீல்டிங் செய்தார்.

அதை கவனித்த அம்பயர் அது விதிமுறைகளுக்கு புறம்பானது என்பதால் களத்திலேயே பாகிஸ்தானுக்கு தண்டனையாக 5 ரன்களை பெனால்டியாக வழங்கி அதை வெஸ்ட் இண்டீஸ் கணக்கில் சேர்த்தார். அடிப்படை விதிமுறை 28.1 பிரிவின்படி களத்தில் பீல்டிங் செய்யும் அணியில் உள்ள விக்கெட் கீப்பரை தவிர இதர 10 வீரர்களும் ஒரு கையுறைகளை கூட பயன்படுத்தக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிலைமையில் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக அறியப்படும் பாபர் அசாமுக்கு இது கூட தெரியாதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

- Advertisement -

மீண்டுமொரு உலகசாதனை:
சமீபத்திய போட்டிகளில் தொடர்ச்சியாக ரன் மழை பொழிந்து வரும் அவர் கடந்த போட்டியில் சதமடித்து ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 2 முறை 3 போட்டிகளில் தொடர்ச்சியாக சதமடித்த முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்தார். அதேப்போல் அதிவேகமாக 1000 ரன்களை எடுத்த கேப்டன் என்ற விராட் கோலியின் சாதனையையும் முறியடித்து புதிய சாதனை படைத்தார். இந்நிலையில் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் கடைசியாக களமிறங்கிய 9 இன்னிங்ஸ்சில் தொடர்ச்சியாக அரைசதம் அல்லது சதம் என பெரிய ரன்களை எடுத்துள்ள அவர் “சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 9 இன்னிங்ஸ்களில் 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த முதல் பேட்ஸ்மேன்” என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன் உலகில் வேறு எந்த பேட்ஸ்மேனும் 9 தொடர்ச்சியான இன்னிங்சில் 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்ததே கிடையாது. அவரின் அந்த 9 ஸ்கோர்கள் இதோ:
1. 196, 2-வது டெஸ்ட், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2022
2. 67 மற்றும் 55, 3-வது டெஸ்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2022
3. 57, முதல் ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2022
4. 114, 2-வது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2022

இதையும் படிங்க : IND vs RSA : 2-வது போட்டியில் மீண்டெழுமா இந்தியா, காட்டக் மைதானம் எப்படி – பிட்ச், வெதர் ரிப்போர்ட் இதோ

5. 105*, 3-வது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2022
6. 66, ஒரே டி20 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2022
7. 103, முதல் ஒருநாள் போட்டி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2022
8. 77, நேற்று, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2022

Advertisement