IND vs RSA : 2-வது போட்டியில் மீண்டெழுமா இந்தியா, காட்டக் மைதானம் எப்படி – பிட்ச், வெதர் ரிப்போர்ட் இதோ

INDvsRSA
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அனல் பறக்கும் ஆரம்பத்தை பெற்றுள்ளது. ஏனெனில் ஜூன் 9இல் டெல்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் பேட்டிங்கில் மிரட்டலாக செயல்பட்ட இந்தியா 212 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் அதை சேசிங்கில் சொல்லி அடித்த தென்னாப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்தது. அதனால் 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள அந்த அணி சொந்த மண்ணாக இருந்தாலும் பொறுப்புடன் மிகச் சிறப்பாகச் செயல்பட்டால்தான் எங்களை வீழ்த்த முடியும் என்று இந்தியாவிற்கு சவாலை காட்டியுள்ளது.

இதை தொடர்ந்து இத்தொடரின் 2-வது போட்டி ஜூன் 12-ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் நடைபெறுகிறது. அதற்காக இரு அணி வீரர்களும் அங்கு சென்றடைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்வதற்கு இந்தியா போராட உள்ளது.

- Advertisement -

மீண்டெழுமா இந்தியா:
இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலைமையில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய தற்காலிக கேப்டன் ரிஷப் பண்ட் முதல் போட்டியில் பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதத்தில் சுமாராக கேப்டன்ஷிப் செய்து விமர்சனத்திற்கு உள்ளானார். எனவே அந்த தோல்வியால் கற்ற பாடத்தை 2-வது போட்டியில் பயன்படுத்த வேண்டிய அவர் இந்தியாவை சிறப்பாக வழிநடத்தி பேட்டிங்கிலும் அதிரடியாக ரன்களை சேர்த்து வெற்றியைப் பெற்ற தருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் முதல் போட்டியில் பேட்டிங்கில் எந்த குறையும் இல்லை என்ற நிலையில் பந்துவீச்சு தான் மொத்தமும் சொதப்பலாக அமைந்தது.

இத்தனைக்கும் ஹர்ஷல் படேல், புவனேஸ்வர், சஹால் என சமீபத்தைய ஐபிஎல் தொடரில் அசத்திய சீனியர் பவுலர்கள் நல்ல பார்மில் இருக்கும் போதிலும் முதல் போட்டியில் முதல் 10 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் கடைசி 10 ஓவரில் ரன்களை வாரி வழங்கி தோல்வியை பரிசளித்தனர். எனவே முதல் போட்டியில் மொத்தமாக சேர்ந்து சொதப்பிய அவர்கள் 2-வது போட்டியில் ஒன்று சேர்ந்து சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இந்தியா வெற்றி பெற முடியும் என்பதை உணர்ந்து பொறுப்புடன் பந்து வீச வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

கட்டாக் மைதானம்:
இந்த போட்டியானது ஒடிசா மாநிலம் புபனேஸ்வரில் உள்ள கட்டாக் நகரில் இருக்கும் பிராபதி மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்குகிறது. மொத்தம் 45,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய இந்த மைதானத்தில் வரலாற்றில் இதற்கு முன் இதுவரை 2 சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது.

1. கடந்த 2015இல் இதே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் முறையாக மைதானத்தில் நடந்த போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா 92 ரன்களுக்கு சுருண்டதால் தென்னாபிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. எனவே இம்முறை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா கவனத்துடன் விளையாட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

2. இருப்பினும் கடந்த 2017இல் இலங்கைக்கு எதிராக இங்கு நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 180/3 ரன்கள் குவிக்க அதன்பின் சஹால் 4 விக்கெட்டுக்கள் எடுத்ததால் 87 ரன்களுக்கு இலங்கை சுருண்டது. அதனால் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

வெதர் ரிப்போர்ட்:
இந்த போட்டி நடைபெறும் கட்டாக் நகரில் போட்டி நாளன்று மழைக்கான வாய்ப்பு எதுவுமில்லை என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 32 டிகிரி செல்சியஸ் என்ற ஓரளவு நல்லவெப்பம் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் கட்டாக் மைதானம் வரலாற்றில் பெரும்பாலும் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு கை கொடுக்கும் என்பதால் டெல்லியில் நடைபெற்ற போட்டியை போல இங்கு ரன்கள் மழையாகப் பொழிவதை பார்ப்பது சற்றுக் கடினமாகும். கடைசியாக நடந்த போட்டியில் கூட இங்கு சஹால் 4 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இருப்பினும் 65 மீ – 70 மீ எனும் இந்த மைதானத்தின் சிறிய பவுண்டரி அளவுகள் பேட்ஸ்மேன்களுக்கு அதிகமாக கை கொடுக்கலாம்.

இதையும் படிங்க : IND vs RSA : களத்தில் முடிவெடுக்க வேண்டியது உங்கள் வேலை, அவர் கையில் இல்லை – பண்ட் பற்றி முன்னாள் வீரர் அதிருப்தி

அதாவது பேட்ஸ்மென்கள் முழு திறமையை வெளிப்படுத்தினால் இங்குள்ள சிறிய பவுண்டரியை எளிதாக கடந்து பெரிய ரன்களை சேர்க்க முடியும். இந்த மைதானத்தின் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 136 ஆகும். மேலும் இது இரவு நேர போட்டி என்பதால் பனியின் தாக்கத்தை கருத்தில் கொண்டு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement