மும்பை அணியை வீழ்த்த இந்த 11 பேர் கொண்ட அணியால் தான் முடியும் – பிரபல நாளிதழ் கணிப்பு

ipl-2020

பதின்மூன்றாவது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பெரும் ஆதிக்கம் கொண்ட அணியாக விளங்கியது. அந்த அணியை மற்ற ஆணிகளால் தொட்டுப் பார்க்கக் கூட முடியவில்லை. எதிர்த்து ஆடும் அனைத்து அணிகளையும் நசுக்கி வீசிவிட்டு இறுதிப்போட்டிக்கு சென்றது. இறுதிப்போட்டியும் ஒன் சைடு போட்டியாக அமைந்தது. இதன்காரணமாக ஐந்தாவது கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

mi

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த கூடிய ஒரு அணியை டைம்ஸ் ஆப் இந்தியா உருவாக்கியுள்ளதாக தெரிவித்து இருக்கிறது. இந்த அணியில் துவக்க வீரர்களாக தேவ்தத் படிக்கல் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருவருமே இந்த வருடம் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள். கேஎல் ராகுல் ஆரஞ்சு தொப்பியை வெற்றி பெற்றிருக்கிறார்.

மூன்றாவது வீரராக ஏபி டிவில்லியர்ஸ் வருகிறார் இந்த வருட ஐபிஎல் தொடரில் இவரது ஆட்டம் அற்புதமாக இருந்தது. மேலும் மும்பை அணிக்கு எதிராக 194 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார். இந்த அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். மேலும் டேவிட் வார்னரும் இந்த அணியில் தேர்வாகியுள்ளார்.

ஐந்தாவது வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு, ஆறாவது வீரராக ராகுல் தேவாத்தியா மற்றும் ரஷீத் கான் ஆகியோர் களமிறங்குகின்றனர். சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிக் நோர்க்கியா. சன் ரைசர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன.

- Advertisement -

Iyer-1

டைம்ஸ் ஆப் இந்தியா தேர்வு செய்த அணி இதோ :

டேவிட் வார்னர், தேவ்தத் படிக்கல், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர்,ஏபி டிவிலியர்ஸ், அம்பத்தி ராயுடு, ராகுல் தேவத்தியா, ரஷித் கான், ரவிச்சந்திரன் அஸ்வின், ஆன்ரிக் நோர்க்கியா சந்தீப் ஷர்மா.