நேதன் லயனை விட அவர் 15 மடங்கு சிறந்த ஸ்பின்னர், பெரிய அளவில் வருவாரு – இளம் ஆஸி வீரரை மனதார பாராட்டிய அஷ்வின்

Lyon
Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்தது. மறுபுறம் முக்கிய கிரிக்கெட் வீரர்கள் விலகியதால் ஒய்ட் வாஷ் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா 3வது போட்டியில் வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்று தங்களது நம்பர் ஒன் இடத்தையும் தக்க வைத்து இத்தொடரை திருப்திகரமாக நிறைவு செய்தது. முன்னதாக இத்தொடரில் எதிர்பார்க்கப்பட்டது போலவே ஆஸ்திரேலியாவின் மூத்த ஸ்பின்னர் நேதன் லயன் இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுத்தார்.

Todd Murphy

ஆனால் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் அவர் தடுமாறிய நிலையில் முதல் முறையாக ஆசிய கண்டத்தில் விளையாடிய டோட் முர்பி 7 விக்கெட்களை சாய்த்து இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்தார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அறிமுக போட்டியிலேயே இளம் வயதில் 5 விக்கெட் ஹால் எடுத்த ஆஸ்திரேலிய ஸ்பின்னராக சாதனை படைத்த அவர் இத்தொடரில் மொத்தம் 14 விக்கெட்டுகளை எடுத்து அசத்தலாக செயல்பட்டார். அதை விட உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக கருதப்படும் விராட் கோலியை இந்த தொடர் முழுவதும் திணறடித்த அவர் மொத்தம் 4 முறை அவுட் செய்தது பல வல்லுனர்களின் பாராட்டுகளை பெற்றது.

- Advertisement -

அஷ்வின் பாராட்டு:
இந்நிலையில் 2013இல் இந்தியாவில் முதல் முறையாக நேதன் லயன் விளையாடிய போது தடுமாறியதாக தெரிவிக்கும் ரவிச்சந்திரன் அஷ்வின் டோட் முர்பி முதல் தொடரிலேயே மிகச் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டியுள்ளார். அந்த வகையில் லயனை விட முதல் தொடரிலேயே 10 – 15 மடங்கு அற்புதமாக செயல்பட்ட அவர் வருங்காலத்தில் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுப்பார் என்று பாராட்டும் அஷ்வின் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “நேதன் லயன் இந்த தொடரில் 20 விக்கெட்டுகளை எடுத்தார். ஆனால் அதற்கான அழுத்தம் இதர ஸ்பின்னர்களாலும் உருவாக்கப்பட்டது. குறிப்பாக டோட் முர்பி தனது அறிமுக தொடரில் அபாரமாக செயல்பட்டார். இங்கே அவரைப் பற்றி பேச என்ன இருக்கிறது என்று நீங்கள் வியக்கலாம்”

“இருப்பினும் இது தான் அவருடைய முதல் இந்திய சுற்றுப்பயணம். ஆனால் வரலாற்றில் முதல் இந்திய சுற்றுப்பயணத்தில் நிறைய ஸ்பின்னர்கள் தடுமாறியது எனது நினைவில் உள்ளது. குறிப்பாக 2013இல் இலங்கை விளையாடி விட்டு நேதன் லயன் இந்தியாவுக்கு வந்தார். ஆனால் தனது முதல் இந்திய சுற்றுப்பயணத்திற்கு நேதன் லயனை விட 10 – 15 மடங்கு டோட் முர்பி சிறப்பாக வந்துள்ளார். தரம், நுணுக்கம் அல்லது செயல்பாடுகள் அடிப்படையில் மட்டும் அவரை நான் சிறந்த பவுலர் என்று சொல்லவில்லை. மாறாக அரௌண்ட் மற்றும் ஓவர் தி ஸ்டம்ப் திசையில் மாறி மாறி சிறப்பாக பந்து வீசும் அவரது திறமையைப் பற்றி பேசுகிறேன்”

- Advertisement -

“அகமதாபாத் டெஸ்டில் அவர் நிறைய ஓவர்களை ஓவர் தி ஸ்டம்ப் திசையில் வீசினார். அது வரை அரௌண்ட் ஸ்டம்ப் திசையில் வீசினார். ஆனால் அந்த 2 திசைகளிலும் அவர் கச்சிதமாக செயல்பட்டார். அந்த 2 திசைகளிலும் அவரால் ஸ்டம்ப்புகளை தாக்க முடிகிறது. மறுபுறம் மிட்சேல் ஸ்டார்க் கால் தடங்களை நேதன் லயன் வலுவாக பயன்படுத்தி வருகிறார். அதை பயன்படுத்தி அவர் 6 – 7வது ஸ்டம்ப் லைனில் சிறப்பாக பந்து வீசுகிறார். குறிப்பாக ஆஸ்திரேலியா போன்ற சுழலுக்கு சாதகமில்லாத மைதானங்களில் அதை பயன்படுத்தி தான் அவர் தன்னுடைய 10 வருட கேரியரை வளர்த்துள்ளார்”

“அவர் பெரும்பாலும் கால் தடங்கலால் சேதப்படுத்தப்பட்ட பிட்ச்களை பயன்படுத்தி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். ஆனால் டோட் முர்பி ஸ்டம்ப்களை ஓவர் திசையிலிருந்து தாக்குகிறார். அவர் வேகமான பேக் ஆஃப் லென்த் பந்தை மட்டும் வீசாமல் தேவைப்படும் போது மெதுவான பந்தையும் வீசுகிறார்”

இதையும் படிங்க:IND vs AUS : குறைந்த இலக்கை துரத்த விடாமல் பெரிய சவால் கொடுத்த ஆஸ்திரேலியா, ஹீரோவாக மாறிய கேஎல் ராகுல் – வென்றது எப்படி

“அது நிச்சயமாக பேட்ஸ்மேனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அதனால் அவரைப் பின்னங்காலில் எதிர்கொள்வது கடினமாகும். எனவே வருங்காலத்தில் இன்னும் அசத்தப்போகும் அவருக்கு நிறைய பாராட்டுகளை கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement