IND vs AUS : குறைந்த இலக்கை துரத்த விடாமல் பெரிய சவால் கொடுத்த ஆஸ்திரேலியா, ஹீரோவாக மாறிய கேஎல் ராகுல் – வென்றது எப்படி

IND vs AUS ODi
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்று ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் தகுதி பெற்ற இந்தியா அடுத்ததாக சொந்த மண்ணில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது. மார்ச் 17ஆம் தேதியன்று மதியம் 1.30 மணிக்கு மும்பையில் இருக்கும் புகழ் பெற்ற வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ட்ராவிஸ் ஹெட் 5 ரன்களில் சிராஜிடம் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் அடுத்து வந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துடன் கை கோர்த்த மற்றொரு தொடக்க வீரர் மிட்சேல் மார்ஷ் 2வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை செய்தார். ஆனால் அப்போது ஹர்டிக் பாண்டியாவிடம் ஸ்டீவ் ஸ்மித் 22 ரன்களில் அவுட்டான நிலையில் மறுபுறம் 10 பவுண்டரி 5 சிக்சருடன் 81 (65) ரன்கள் குவித்து அச்சுறுத்தலை கொடுத்த மிட்சேல் மார்ஷ் ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் சிக்கினார். அதை பயன்படுத்திய இந்தியா மார்னஸ் லபுஸ்ஷேன் 15, ஜோஷ் இங்லிஷ் 26, கேமரூன் கிரீன் 12, கிளன் மேக்ஸ்வெல் 8, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 5 என அதிரடி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் காலி செய்து அசத்தியது.

- Advertisement -

அதனால் 35.4 ஓவரிலேயே ஆஸ்திரேலியாவை 188 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 189 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு பவுலிங்க்கு சாதகமாக இருந்த அதே பிட்ச்சில் துல்லியமாக பந்து வீசிய ஆஸ்திரேலியா இஷான் கிசான் 3, விராட் கோலி 4, சூரியகுமார் யாதவ் 0 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிரடி காட்டியது.

அதனால் 16/3 என்ற மோசமான தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவை காப்பாற்ற முயன்ற மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 20 (31) ரன்களிலும் கேப்டன் ஹர்திக் பாண்டியா 25 (31) ரன்களிலும் சீரான இடைவெளியில் அவுட்டாகி மேலும் பின்னடைவை கொடுத்தனர். அதன் காரணமாக 83/5 என தடுமாறிய இந்தியாவை அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் மீட்டெடுக்க போராடினார். தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருப்பதால் கடுமையான கிண்டல்களையும் விமர்சனங்களையும் சந்தித்துள்ள அவர் இந்த போட்டியில் இலக்கு குறைவாக இருந்த காரணத்தால் விக்கெட்டை எளிதாக பரிசளிக்காமல் நங்கூரமாக நின்று நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தி அரை சதம் கடந்து வெற்றிக்கு போராடினார்.

- Advertisement -

அந்த வேகத்துக்கு ரன் ரேட்டும் கட்டுக்குள் இருந்த காரணத்தால் நேரம் செல்ல செல்ல நன்கு செட்டிலான அவருக்கு ரவீந்திர ஜடேஜாவும் நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தி கை கொடுத்தார். இவர்களை பிரித்தால் வெற்றி என்ற நிலைமை ஏற்பட்டதால் அதை செய்வதற்கு ஸ்டீவ் ஸ்மித் போட்டு திட்டங்களையும் திட்டங்களையும் தவிடு பொடியாக்கிய இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து 39.1 ஓவரிலேயே 191/5 ரன்கள் எடுக்க வைத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது.

அதில் ராகுல் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 75* (91) ரன்களும் ஜடேஜா 5 பவுண்டரியுடன் 45* (69) எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்களை எடுத்தார். பொதுவாகவே பேட்டிங்க்கு சாதகமாக இருக்கக்கூடிய வான்கடே மைதானத்தில் இப்போட்டியில் பவுலிங்க்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் ஒரு கட்டத்தில் 129/2 என்ற நல்ல நிலையில் இருந்த ஆஸ்திரேலியாவை மிடில் ஓவர்களில் அபாரமாக பந்து வீசி வெறும் 188 ரன்களுக்கு சுருட்டியதே இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.

இதையும் படிங்க: வீடியோ : இந்த ஓவரில் அவுட்டாவாரு பாருங்க, நேரலையில் பிக்சிங் செய்தாரா பாக் வீரர்? கலாய்க்கும் ரசிகர்கள்

ஏனெனில் அதன் காரணமாக ஆரம்பத்தில் விராட் கோலி, சூரியகுமார் உள்ளிட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியும் இலக்கு குறைவாக இருந்ததை பயன்படுத்திய ராகுல் தமக்கே உரித்தான குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி இந்தியாவுக்கு மிகச் சிறப்பான வெற்றியை பெற்று கொடுத்தார். மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய ஆஸ்திரேலியா பந்து வீச்சில் வெற்றி காண முடியவில்லை. அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள இந்தியா சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

Advertisement