வீடியோ : இந்த ஓவரில் அவுட்டாவாரு பாருங்க, நேரலையில் பிக்சிங் செய்தாரா பாக் வீரர்? கலாய்க்கும் ரசிகர்கள்

- Advertisement -

பாகிஸ்தானில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2023 பிஎஸ்எல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில் பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் கேப்டன் பாபர் அசாம் தலைமையிலான பெஷாவர் ஜால்மி தனது லீக் சுற்றில் 5 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 4வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த நிலையில் மார்ச் 16ஆம் தேதியன்று கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு எதிராக களமிறங்கிய அந்த அணி முதலில் பேட்டிங் செய்து 183/8 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக தொடக்க வீரர் மற்றும் கேப்டன் பாபர் அசாம் 10 பவுண்டரியுடன் அரை சதமடித்து 64 (39) ரன்களும் முகமது ஹாரீஸ் அதிரடியாக 34 (17) ரன்களும் எடுக்க இஸ்லாமாபாத் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் சடாப் கான் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 184 ரன்களை துரத்திய இஸ்லாமாபாத் அணிக்கு 2வது விக்கெட்டுக்கு 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய அலெக்ஸ் ஹேல்ஸ் 57 (37) ரன்களும் ஷான் மசூட் 60 (48) ரன்களும் எடுத்த போதும் மிடில் ஆர்டரில் கோலின் முண்ரோ 4, அஸ்ரப் 5 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ரன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

பிக்சிங் செய்தாரா:
அதனால் கடைசியில் கேப்டன் சடாப் கான் 26* (12) ரன்கள் அதிரடியாக எடுத்தும் 20 ஓவர்களில் இஸ்லாமாபாத் 171/6 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்து இத்தொடரிலிருந்து வெளியேறியது. மறுபுறம் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாபர் அசாம் தலைமையிலான பெஷாவர் குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது. முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் அணிக்கு கேப்டன் பாபர் அசாம் நன்கு செட்டிலாகி சதத்தை அடிக்கும் வேகத்தில் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது 13வது ஓவரை வீச வந்த இஸ்லாமாபாத் கேப்டன் சடாப் கான் அதற்கு முந்தைய ஓவரில் ரன் அவுட் முயற்சியில் கிழே விழுந்த பெய்ல்ஸை எடுத்து ஸ்டம்பில் வைக்கும் போது “இந்த ஓவரில் பாபர் அசாம் அவுட்டாவார் பாருங்க” என்று அம்பயரிடம் தெரிவித்தது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.

ஆச்சரியப்படும் வகையில் சொன்னது போலவே அதே ஓவரின் கடைசி பந்தின் லைனை தவற விட்ட பாபர் அசாம் காலில் வாங்கியதால் சடாப் கான் எல்பிடபிள்யூ முறையில் அவுட் கேட்டார். கிட்டத்தட்ட பார்ப்பதற்கு அவுட் போல இருந்ததால் நடுவரும் கொஞ்சமும் யோசிக்காமல் கையை உயர்த்தி அவுட் வழங்கினார். மறுபுறம் பொதுவாகவே பெரும்பாலான அது போன்ற சமயங்களில் பேட்ஸ்மேன்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள் என்ற நிலைமையில் பாபர் அசாம் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காமல் ரிவ்யூவும் எடுக்காமல் ஃபெவிலியன் நோக்கி நடையை கட்டினார்.

- Advertisement -

இந்த தருணத்தை படம் பிடித்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு நேரலையில் அப்பட்டமாக ஃபிக்சிங் நடப்பதை பார்த்திருக்கிறீர்களா அதற்கு இது தான் சிறந்த எடுத்துக்காட்டு என்று பாகிஸ்தான் வீரர்களை கலாய்த்து வருகிறார்கள். ஏனெனில் பொதுவாகவே 1990 முதல் சமீப காலங்கள் வரை நிறைய பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி வாழ்நாள் தடை பெற்ற கதைகள் ஏராளமாக இருப்பதை இந்த உலகமே அறியும். அதன் ஒரு பகுதியாகவே இந்த தருணத்திலும் பாகிஸ்தான் வீரர் சடாப் கான் பிக்சிங் செய்ததாக நிறைய ரசிகர்கள் வெளிப்படையாகவே சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க:விராட் கோலி லெஜெண்ட் ஆனா தரமான சகாப்தத்தின் நாயகனான சச்சின் தான் எப்போவும் பெஸ்ட் – முன்னாள் பாக் வீரர் வெளிப்படை

இருப்பினும் தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் தனது பவுலிங் மீது இருக்கும் அதீத நம்பிக்கையால் இந்த ஓவர் முடிவதற்குள் பாபர் அசாமை அவுட் செய்கிறேன் பாருங்கள் என்று சொல்லி அவுட் செய்ததாக பாகிஸ்தான் ரசிகர்கள் இதற்கு பதிலடி கொடுக்கிறார்கள். அதாவது இது தன்னம்பிக்கைக்கு கிடைத்த பரிசு என்று தெரிவிக்கும் அவர்கள் ஒருவேளை பிக்சிங் செய்திருந்தால் சடாப் கான் அணி ஏன் இறுதியில் தோற்றிருக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள்.

Advertisement