இன்றைய போட்டி தடைபெறுமா?

rohit
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளிடையேயான நிடாஸ் கோப்பை டி20லீக் இன்று கொழும்புவில் உள்ள பிரேமதாஸா ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி கொழும்புவில் இன்று மாலை இடியுடன் கூடிய மின்னல் வர வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

nidahas

- Advertisement -

மேலும் சரியா ஆட்டம் தொடங்கப்படவுள்ள 7மணியளவில் மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.7மணியளவில் மழைபெய்யத் தொடங்கினாலும் சிறிது நேரத்தில் மழைவிட்டு வானம் மீண்டும் தெளிவாகிவிடும் என்று தெரிகின்றது.

எப்படியும் இன்றுமாலை 47% முதல் 51% சதவீதம் வரையிலும் மழைபெய்ய வாய்ப்புகள் உள்ளதால் இன்று மாலை நடைபெறவுள்ள போட்டி நடைபெறுமா அல்லது மழையால் பாதிக்கப்படுமா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

cricket

இப்போது நிலவரப்படி கொழும்புவில் தட்பவெப்பநிலை 28° செல்சியஸாக உள்ளது.எப்படியிருந்தாலும் இன்று மாலை கொழும்பு நகரத்தின் பல்வேறு பகுதிகளில் நிச்சயம் மழைபெய்யுமென வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒருவேளை ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டால் டக்வொர்த் லூவிஸ் மூலம் தான் இன்றைய ஆட்டத்தின் முடிவு தெரியவரும்.

sharma

Advertisement