இன்றைய போட்டி மழையால் தடைபெறுமா?

rohit

இந்தியா-இலங்கை-வங்கதேசத்திற்கு இடையேயான நிதாஸ் கோப்பை முத்தரப்பு டி20 போட்டிகள் நடந்து வந்தது.இதன் இறுதி ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.இந்த ஆட்டத்தில் இந்தியா வங்கதேச அணியுடம் களம்காண உள்ளது.

sundar1

இலங்கையை வீழ்த்தி இறுதி சுற்றிற்கு நுழைந்துள்ள வங்கதேச அணி நம்பர் 1 அணியான இந்தியாவிடம் மோதவிருக்கு இந்த ஆட்டத்தை ரசிகர்கள் அவளாக எதிர்பார்த்து வருகின்றனர்.இந்நிலையில் மழையின் காரணமாக போட்டி பாதிக்கப்படலாம் என்று தற்போது வந்துள்ள வானிலை நிலவரம் தெரிவித்துள்ளது. ஏற்கவே நடந்து முடிந்த ஆட்டத்தில் கூட மழை குறைந்ததுடன் ஆட்டத்தின் ஒவர்கள் குறைக்கப்பட்டது.இதனால் ஆட்டத்தின் விறுவிறுப்பு குறைந்ததடன் ரசிகர்களும் அதிருப்தி அடைந்தனர் ஆனால் தற்போது இன்று நடக்கவிருக்கும் இறுதி ஆட்டத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து வரும் நிலையில் இன்றும் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதுகுறித்து வானிலை அறிக்கைகள் தெரிவிக்கையில் இன்று மதியம் 1-3 மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் போட்டி இரவு 7 மணிக்குத்தான் என்பதால் ஆடுகளத்தில் தண்ணீர் தேங்கினாலும் அதனை சுத்தம் செய்ய கால அவகாசம் இருக்கும் .மேலும் மாலை 5 மணியளவில் மழை பெய்வரதற்கான வாய்ப்பு குறைவாகவும் பின்னர் 6 மணிக்கு சற்று அதிகரித்து 18 % மாறும் இருப்பினும் இது ஆட்டத்தை பாதிப் பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு தான்.

bangladeshs

ஆனால் பிரச்சனை என்னவென்றால் இரவு 7 மணிக்கு மழை யின் அளவு அதிகரிக்கும் அதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு மாகவும் 10 மணிக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை அறிக்கைகள் தெரிவித்துள்ளது.இதனால் ஆட்டம் பாதிக்கப்படும் ஆட்டத்தின் ஒவ்ர்கள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.இதையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் சற்று சோகத்தில் இருக்கின்றனர்.

- Advertisement -
Advertisement