க்ரீன் சிக்னல் கொடுத்த தமிழக அரசு. சேப்பாக்கத்தில் மட்டுமே நடைபெறும் TNPL தொடர் – எப்போ ஸ்டார்ட் தெரியுமா ?

TNPL

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களையும் சேர்த்து ஐபிஎல் தொடர் நடைபெறுவது போல தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மாவட்டங்களை தலைமையாக வைத்து தமிழ் நாட்டுக்குள்ளேயே நடத்தப்படும் டி20 தொடர் தான் டிஎன்பிஎல். தமிழக ரசிகர்களின் மகத்தான வரவேற்புடன் ஐந்தாவது சீசனை எட்டியுள்ள இந்த தொடரானது நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

tnpl 1

ஆனால் தற்போது தமிழகத்தில் இருந்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஐந்தாவது சீசன் முழுவதையும் சென்னை சேப்பாக்கத்தில் நடத்த முடிவு செய்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தொடரை நடத்துவதற்காக தமிழக அரசு இடமும் அதிகாரபூர்வமாக ஒப்புதல் வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இதனால் இந்த தொடரானது திட்டமிட்டபடி வருகிற 19ம் தேதி துவங்கி அடுத்த மாதம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரின் துவக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணியும், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியும் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்புச் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கிங்ஸ் 20 ஆம் தேதி தனது முதல் போட்டியில் திருப்பூர் அணியையும், அதனைத் தொடர்ந்து 24 ஆம் தேதி நெல்லை அணியும், 28ஆம் தேதி சேலம் அணியும் எதிர்கொள்கிறது.

Chepauk Super

அதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 1ம் தேதி திண்டுக்கல் அணியும், 4ஆம் தேதி மதுரை அணியும், 6ஆம் தேதி கோவையிலும், 8ஆம் தேதி திருச்சி அணியையும் எதிர்கொள்கிறது. கொரோனா காரணமாக இந்த ஆண்டு டிஎன்பிஎல் தொடர் முழுவதும் பார்வையாளர்கள் இன்றி கடுமையான விதிமுறைகளுக்கு இடையே நடத்தப்பட மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதால் இந்த தொடரானது பார்வையாளர் இன்று நடைபெறும்.

- Advertisement -

tnpl

அதேவேளையில் இத்ததோடர் முழுவதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது தனிமைப்படுத்துதலை முடித்த பிறகு நாளை 9ஆம் தேதி முதல் பயிற்சியில் ஈடுபட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement