இந்தியா – இங்கிலாந்து சென்னை டெஸ்ட் : ரசிகர்களுக்கு கேட் போட்ட நிர்வாகம் – ரசிகர்கள் அதிர்ச்சி

Ind-lose
- Advertisement -

ஆஸ்திரேலியா தொடரை வெற்றிகரமாக முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி அந்த சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா வர இருக்கிறது. அதன்படி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

pant

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி துவங்குகறது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. முதல் இரண்டு போட்டியும் சென்னையில் நடைபெற அடுத்த இரண்டு போட்டியும் அகமதாபாத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த தொடரின் 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்தது பிசிசிஐ. அதனை தொடர்ந்து தற்போது சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு மைதானத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழக கிரிக்கெட் செயலாளர் ஆர்எஸ் ராமசாமி கூறுகையில் :

வீரர்களின் பாதுகாப்பு காரணமாக சென்னையில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் மைதானத்தில் எந்த பார்வையாளர்களுக்கும் அனுமதி இல்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இதனால் நீண்ட நாட்களாக போட்டி நடைபெறாமல் ஏக்கத்தில் இருந்த தமிழக ரசிகர்கள் வருத்தமும் மற்றும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

fans 2

ஏனெனில் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான மைதானத்தில் 50% ரசிகர்களுடன் போட்டி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளதால் சென்னையிலும் ரசிகர்கள் 50% அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement