- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரஞ்சிக் கோப்பை: 203 ரன்ஸ்.. புஜாரா அணியை சுருட்டிய தமிழ்நாடு.. சாய் கிஷோர் அசத்தல்.. முதல் நாளிலேயே அபாரம்

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக் கோப்பை 2024 – 25 சீசன் அக்டோபர் 11ஆம் தேதி துவங்கியது. அதில் எலைட் குரூப் டி பிரிவில் இடம் வகிக்கும் தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிரா அணிகள் மோதும் போட்டி கோவையில் எஸ்என்ஆர் காலேஜ் மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய சௌராஷ்ட்ரா அணிக்கு ஹர்விக் தேசாய் ஆரம்பத்திலேயே டக் அவுட்டானார். மறுபுறம் நிதானமாக விளையாட முயற்சித்த சைரங் ஜானி 34 ரன்களில் அவுட்டானார். அவரை அவுட்டாக்கிய முகமது மறுபுறம் நங்கூரத்தை போட முயன்ற பர்ஸ்வராஜ் ராணாவை 15 ரன்களில் காலி செய்தார்.

- Advertisement -

புஜாரா அணி:

அதனால் 51-3 என தடுமாறிய சௌராஷ்ட்ரா அணிக்கு மிடில் ஆர்டரில் அடுத்ததாக வந்த நம்பிக்கை செடேஸ்வர் புஜாரா நிதானமாக விளையாடினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி 100 போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைக் கொண்ட அவர் 41 பந்துகளை எதிர்கொண்டு நங்கூரத்தை போட்டார். ஆனால் அப்போது அவரை 16 ரன்களில் தமிழகத்தின் கேப்டன் சாய் கிஷோர் கிளீன் போல்ட்டாக்கினார்.

அதனால் மேலும் சரிவை சந்தித்த சௌராஷ்ட்ராவுக்கு வசவடா நங்கூரமாக விளையாடத் துவங்கினார். ஆனால் எதிர்ப்புறம் செல்டன் ஜாக்சன் 10, பிரேரக் மன்கட் 20 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய வசவடா அரை சதம் அடித்து போராடினார். அவருடன் எதிர்புறம் கைகொடுக்க முயற்சித்த கேப்டன் ஜெய்தேவ் உனட்கட் 21 (49) ரன்களில் போராடி சாய் கிசோர் சுழலில் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

தமிழ்நாடு அசத்தல்:

இறுதியில் வசவடா 62* (149) ரன்கள் எடுத்துப் போராடியும் எதிர்ப்புறம் வந்த வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்த தமிழ்நாடு 203 ரன்களுக்கு சௌராஷ்டிராவை ஆல் அவுட் செய்தது. தமிழ்நாடு அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சாய் கிஷோர், முகமது, சோனு யாதவ் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு முதல் நாள் முடிவில் 2 ஓவரில் 0-0 ரன்களுடன் விளையாடத் துவங்கியுள்ளது.

இதையும் படிங்க: காவல்துறை டிஎஸ்பி’யாக பொறுப்பேற்ற இந்திய அணி வீரர் முகமது சிராஜ்.. இனிமேல் விளையாடுவாரா?

களத்தில் சாய் சுதர்சன், நாராயன் ஜெகதீசன் உள்ளனர். அந்த வகையில் முன்னாள் சாம்பியனான சௌராஷ்டிராவை டாஸ் இழந்த பின்பும் முதல் நாளிலேயே சுருட்டிய தமிழ்நாடு இப்போட்டியில் நல்ல துவக்கத்தை பெற்றுள்ளது என்றே சொல்லலாம். இதைத் தொடர்ந்து 2வது நாளில் சௌராஷ்ட்ரா அணியை விட தமிழ்நாடு முன்னிலை பெறுவதற்கு போராட உள்ளது.

- Advertisement -