போயும் போயும் க்ருனால் பாண்டியாவுக்கு எதிராகவா இப்படி நடக்கனும் – தமிழக அணி சந்தித்த மோசமான தோல்வி

tn
- Advertisement -

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அனைத்து மாநில அணிகளும் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரில் விஜய் சங்கர் தலைமையிலான தமிழ்நாடு அணி பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. இந்நிலையில் இன்று திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் பரோடா அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி விளையாடியது.

sanjay

- Advertisement -

இந்த போட்டியில் எளிதாக வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட தமிழக அணியானது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி படு மோசமான தோல்வியை சந்தித்தது ரசிகர்களின் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஏனெனில் இந்த போட்டியில் முதலில் விளையாடிய பரோடா அணியானது 50 ஓவர்கள் கொண்ட இந்த ஆட்டத்தில் 39 ஓவர்களிலேயே 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் 115 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய தமிழக அணி 20 ஓவர்கள் மட்டுமே சந்தித்து 73 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

krunal

அதிலும் குறிப்பாக பரோடா அணியில் க்ருனால் பாண்டியா சிறப்பாக விளையாடியதால் தமிழக அணியை தற்போது நம் ரசிகர்களே கிண்டல் செய்து வருகின்றனர். இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் பேட்டிங்கில் 38 ரன்களை அவர் அடித்திருந்தார். ஆனால் தமிழக அணியில் ஒருவர் கூட 20 ரன்களை அடிக்கவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : என்னங்க அடி அடிக்குறாரு. ருதுராஜ் கெய்க்வாட்டின் அதிரடியால் – திகைத்துப்போன ரசிகர்கள்

அதேபோன்று பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட க்ருனால் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் பேட்டிங் மற்றும் பவுலிங் என அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் போயும் போயும் இவரிடமா தோற்பது என்கிற தொனியில் ரசிகர்களை கிண்டல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement