என்னங்க அடி அடிக்குறாரு. ருதுராஜ் கெய்க்வாட்டின் அதிரடியால் – திகைத்துப்போன ரசிகர்கள்

Ruturaj
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14-வது ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் துவக்க வீரராக களமிறங்கிய விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் அந்த தொடரில் 635 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து தனது அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் சையத் முஷ்டாக் அலி தொடரின் போது சிறப்பாக செயல்பட்டார். அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரிலும் பிரம்மாண்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

Gaikwad 3

- Advertisement -

ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்துள்ள 4 போட்டிகளில் அடுத்தடுத்து மூன்று சதங்களை விளாசி அசத்தியிருந்தார். இந்நிலையில் சண்டிகார் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மீண்டும் சதம் அடித்து தொடர்ச்சியாக நான்காவது சதம் விளாசி அசத்தியுள்ளார். இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய சண்டிகர் அணியானது 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 309 ரன்களை குவித்தது.

அடுத்ததாக 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மகாராஷ்டிரா அணி களமிறங்கியது. அப்போது துவக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் வழக்கம்போலவே அதிரடியாக விளையாடி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

gaikwad

இந்த போட்டியில் 132 பந்துகளை சந்தித்த அவர் 168 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது மூலம் தொடர்ச்சியாக 4வது சதம் விளாசியுள்ளார். அவரது இந்த ஆட்டம் காரணமாக 49வது ஓவரில் மகாராஷ்டிர அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட்டின் அதிரடி ஆட்டம் எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் வேளையில் ரசிகர்கள் அவரது அபார பேட்டிங் திறனை கண்டு திகைத்துப் போயுள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : தென்னாப்பிரிக்கா தொடரில் இவர் விளையாடாதது நமக்கு மிகப்பெரிய இழப்பு – கம்பீர் ஓபன்டாக்

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தக்க வைக்கப்பட்டுள்ள இவர் நிச்சயம் இனி வரும் தொடர்களில் சென்னை அணியின் முக்கிய வீரராக தனது பங்களிப்பை வழங்குவார் என்றும் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Advertisement