தென்னாப்பிரிக்கா தொடரில் இவர் விளையாடாதது நமக்கு மிகப்பெரிய இழப்பு – கம்பீர் ஓபன்டாக்

Gambhir
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே வரும் 26-ம் தேதி துவங்கவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தற்போது மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் குவாரன்டைனில் இருந்து வருகிறது. 3 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு பிறகு 16ஆம் தேதி மும்பையிலிருந்து இந்திய அணியானது தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு புறப்பட இருக்கிறது. அதனைத்தொடர்ந்து அங்கும் சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு 26-ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.

ind 1

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மா தற்போது காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மாற்று வீரராக இந்திய ஏ அணியின் கேப்டன் பிரியங்க் பன்சால் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரோகித் சர்மாவின் காயம் குணமடைய நான்கு வார காலமாகும் என்பதன் காரணமாக அவர் ஒரு நாள் தொடரின் போதுதான் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா விலகியதை தொடர்ந்து அதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் கூறுகையில் :

rohith 1

டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா காயம் காரணமாக விலகியிருப்பது இந்திய அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும். கடந்த பல ஆண்டுகளாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் தற்போதுதான் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவ்வேளையில் அவரது விலகல் இந்திய அணிக்கு நிச்சயம் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என கம்பீர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : மீண்டும் பூதாகரமாக வெடிக்கும் கோலி ரோஹித் மோதல். அணியில் ஏற்பட்டுள்ள குழப்பம் – என்ன ஆகப்போகுதோ?

டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து விலகிய ரோஹித் சர்மா கோலியின் நிபந்தனை காரணமாகத்தான் விலகினார் என்ற ஒரு செய்தியும் பரவி வருகிறது.

Advertisement