இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது டிசம்பர் 26-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அந்த தொடருக்குப் பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் அங்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது விராத் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டு அவரின் கீழ் 18 வீரர்கள் இந்திய அணியில் இடம் பெற்று இருந்தனர். ஆனால் இந்த டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா பங்கேற்றால் தான் விளையாட மாட்டேன் என்று கோலி கூறியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ரோஹித் இடம்பெற்றால் தான் விளையாடமாட்டேன் என்றும் பி.சி.சி.ஐ யிடம் கோலி ஒரு நிபந்தனை விதித்தாகவும் கூறப்படுகிறது. அதன்படியே பிசிசிஐ அதிகாரிகள் ரோகித் சர்மாவை தொடர்பு கொண்டு இது குறித்து பேசிய போதுதான் தான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்க கவனம் செலுத்துவதாக கூறி ரோகித் சர்மா இந்த டெஸ்ட் தொடரில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் ரோகித் சர்மா காயம் காரணமாகவே இந்த டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார் என்ற தகவல் வெளியாகியது. இருப்பினும் ரோஹித் மற்றும் கோலி இடையே மோதல் என்று ஒரு செய்தி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஒருநாள் அணிக்கு கேப்டனாக ரோகித் நியமிக்கப்பட்டுள்ளதால் விராட் கோலி ஒருநாள் போட்டியில் விளையாட விருப்பம் தெரிவிக்காமல் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

அதன்படி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது விராட் கோலி விடுப்பு கேட்டுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக தற்போது மீண்டும் விராட் கோலி ரோகித் சர்மா ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் இணைந்து விளையாட விருப்பமில்லை என்றும் ஒரு தகவல் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது பிசிசிஐ என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் திகைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ரோஹித் சர்மாவினை தொடர்ந்து தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து வெளியேறுகிறாரா? – விராட் கோலி
எது எப்படியிருப்பினும் விராட் கோலியோ அல்லது ரோகித் சர்மாவோ தங்களுக்கு இடையேயான மோதல் குறித்து எந்தவித அறிக்கையும் வெளியிடவில்லை ஆனாலும் அடுத்தடுத்து இருவரும் இந்த ஒரே தொடரில் விளையாட முடியாமல் போனது ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



