ரோஹித் சர்மாவினை தொடர்ந்து தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து வெளியேறுகிறாரா? – விராட் கோலி

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான டெஸ்ட் அணி ஏற்கனவே பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி டிசம்பர் 26ஆம் தேதி துவங்க உள்ள இந்த தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் விராட் கோலியின் தலைமையின் கீழ் 18 வீரர்கள் அறிவிக்கப்பட்டனர்.

Dekock

- Advertisement -

நாளை மறுதினம் 16ஆம் தேதி இந்தியாவில் இருந்து புறப்படும் இந்திய அணியானது முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதன்பிறகு இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெறும்.

ஏற்கனவே இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மா பயிற்சியின்போது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். அதனை தொடர்ந்து தற்போது மேலும் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக தற்போது விராட் கோலியின் விலகல் காரணமாக அமையப்போகிறது.

vamika

அதன்படி தனது குழந்தையின் பிறந்த நாள் வரவிருக்கும் காரணமாக ஜனவரி முதல் வாரத்தில் அவர் விடுப்பு வேண்டும் என கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. அப்படி அவருக்கு விடுப்பு அளிக்கப்படும் பட்சத்தில் அவர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை விராட் கோலி தவற விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது என்று கூறுகின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் எந்தவொரு அணியும் படைக்காத சாதனையை படைத்து அசத்திய – பாகிஸ்தான் அணி

மேலும் விராட் கோலி அணியில் இருந்து வெளியேறும் பட்சத்தில் ரோஹித்தும் ஒருநாள் தொடரில் விளையாட முடியாத பட்சத்தில் புதிய இந்திய அணி அந்த தொடரில் விளையாடும் என்று கூறப்படுகிறது. மேலும் ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மாவும் விளையாட முடியாமல் போனால் ஒருநாள் அணிக்கு புதிதாக கேப்டன் நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement