டி20 கிரிக்கெட்டில் எந்தவொரு அணியும் படைக்காத சாதனையை படைத்து அசத்திய – பாகிஸ்தான் அணி

Pak
- Advertisement -
  1. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபகாலமாகவே டி20 கிரிக்கெட்டில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஆனால் அதனைத் தவிர்த்து இந்த ஆண்டு முழுவதுமே டி20 கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய ஒரு அணியாக பாகிஸ்தானில் இருந்து வருகிறது.

haider ali

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடர் முடிந்து தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டி நேற்று கராச்சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய பாகிஸ்தான் அணி டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.

அதன்படி நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ரிஸ்வான் 78 ரன்களும், ஹைதர் அலி 68 ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

wivspak 1

பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி நடப்பு ஆண்டில் தங்களது 18-ஆவது வெற்றியை டி20 கிரிக்கெட்டில் பதிவு செய்துள்ளது.

இதையும் படிங்க : ரஹானேவுக்கு அதிர்ஷ்டம் இருக்குப்பா. அவரை தூக்கவே முடியாது போலயே – இதை கவனிச்சீங்களா?

இதன் மூலம் ஒரே ஆண்டில் அதிக டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற அணியாக பாகிஸ்தான் அணி தற்போது வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதற்கு முன்னதாக 2018ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி தான் ஒரே ஆண்டில் 17 வெற்றிகளை பதிவு செய்திருந்தது. இப்படி தங்களின் சாதனையை தாங்களே முறியடித்து டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி உச்சம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement