ரஹானேவுக்கு அதிர்ஷ்டம் இருக்குப்பா. அவரை தூக்கவே முடியாது போலயே – இதை கவனிச்சீங்களா?

- Advertisement -

இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வந்த ரஹானேவின் பேட்டிங் கடந்த பல தொடர்களாகவே மிகவும் மோசமாக இருந்து வருவது. கடைசியாக அவர் விளையாடிய 20 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் இரண்டு அரை சதங்கள் மட்டுமே அடித்து உள்ளதால் அவர் மீது அதிக அளவு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி துணை கேப்டன் பதவியில் இருப்பதால் மட்டுமே அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீடித்து வருகிறார். அந்த பதவி மட்டும் இல்லையென்றால் அவரால் அணியில் இருக்க முடியாது என்ற கருத்துக்களும் இருந்து வந்தன.

Rahane

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது அவரது துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ரோகித் சர்மாவிற்கு வழங்கப்பட்டது. இதன் காரணமாக இந்திய அணியில் இருந்து அவரை மெல்ல மெல்ல நீக்கவே பிசிசிஐ இந்த முடிவை எடுத்ததாக தெரிந்தது.

ஆனால் தற்போது இந்திய அணியில் நிலவும் சூழல் அனைத்துமே ரஹானேவுக்கு சாதகமாக இருந்து வருகிறது. ஏனெனில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மா காயம் காரணமாக இந்த டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். அதேபோன்று விராட் கோலியும் இதுவரை அணியில் இணையவில்லை என்று தெரிகிறது.

Rahane

இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்த தொடரில் விளையாடுவது மட்டுமின்றி இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படவும் பிரகாசமான வாய்ப்பு அவருக்கு அமைந்துள்ளது. இந்த தொடருக்கான டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டபோது சந்தேகம்தான் என்று இருந்த அவரது இடம் தற்போது நீக்கமுடியாத அளவிற்கு உறுதியாகியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : ஒரே ஆளா நின்னு அணியை காப்பாத்துறாரு இவரு நம்ம டீமுக்கு ரொம்ப அவசியம் – சஞ்சய் பாங்கர் கருத்து

ஒரு வேளை திட்டமிட்டபடி ரோகித் மற்றும் கோலி ஆகியோர் ஆடியிருந்தால் மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் விஹாரி ஆகியோர் விளையாடி இருப்பார்கள். ஆனால் தற்போது இருக்கும் சூழலில் ரஹானே அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டால் கூட அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றே தோன்றுகிறது.

Advertisement