IPL 2023 : இதெல்லாம் நியாயமே இல்ல. சேப்பாக்கம் மைதான நிர்வாகத்தின் மீது – சென்னை ரசிகர்கள் அதிருப்தி

CSK-Fans
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் நடப்பு ஆண்டிற்கான பதினாறாவது ஐபிஎல் தொடரானது இன்னும் மூன்று தினங்களில் துவங்க உள்ளது. மீண்டும் சொந்த மைதானங்களில் அனைத்து அணிகளும் பங்கேற்று விளையாட இருப்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் சென்னை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் காண தமிழக ரசிகர்களுடன் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

CSK Ms DHoni

- Advertisement -

இந்த தொடரின் முதல் போட்டி அகமதாபாத் நகரில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. அதனை தொடர்ந்து சென்னையில் சிஎஸ்கே அணி அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

41 வயதாகும் தோனிக்கு இதுவே கடைசி சீசன் என்பதனால் இம்முறை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி விளையாடுவதையும், சிஎஸ்கே அணியையும் பார்த்துவிட வேண்டும் என்பதற்காக தமிழக ரசிகர்கள் சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை போட்டி போட்டு வாங்கியுள்ளனர்.

CSK-Fans

ஏற்கனவே சென்னை அணி பங்கேற்கும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் பல்வேறு நகரங்களில் விற்று தீர்த்திருந்த நிலையில் தற்போது சென்னையில் நடைபெறும் லக்னோ அணிக்கு எதிரான முதல் போட்டிக்கு மட்டும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 1500 ரூபாய் முதல் அதிகபட்சம் ₹3000 வரை ரசிகர்களுக்கான டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் டிக்கெட் விற்று தீர்க்கப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகி இருந்தாலும் ரசிகர்கள் சேப்பாக்கம் மைதான நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். ஏனெனில் 40 ஆயிரம் பேர் கண்டு களிக்கக்கூடிய அளவில் பெரியதாக இருக்கும் இந்த சேப்பாக்கம் மைதானத்தில் வெறும் 3 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே ரசிகர்களுக்காக விற்கப்பட்டதாகவும், மீதமுள்ள டிக்கெட் ஸ்பான்சருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க : IPL 2023 : அவங்க டீம்ல ரொம்ப குழப்பம் இருக்கு. அந்த டீமை வச்சிக்கிட்டு பிளேஆப்-க்கு போக முடியாது – ஆகாஷ் சோப்ரா கருத்து

ஏனெனில் வெறும் 3000 டிக்கெட்டுகளை மட்டுமே விற்றுவிட்டு மீதமுள்ள டிக்கெட்டுகளை மற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வழங்கக் கூடாது என்றும் அதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைவார்கள் என்பதனால் பெருவாரியான டிக்கெட்டுகளை ரசிகர்களுக்கு விற்று விட்டு குறிப்பிட்ட அளவே ஸ்பான்சர்களுக்கோ அல்லது பிரபலங்களுக்கோ வழங்க வேண்டும் என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளம் மூலமாக பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement