IPL 2023 : அவங்க டீம்ல ரொம்ப குழப்பம் இருக்கு. அந்த டீமை வச்சிக்கிட்டு பிளேஆப்-க்கு போக முடியாது – ஆகாஷ் சோப்ரா கருத்து

Chopra
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது வரும் மார்ச் 31-ம் தேதி துவங்கி மே 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான முதல் போட்டி வருகிற வெள்ளிக்கிழமை அன்று அகமதாபாத் நகரில் துவங்குகிறது. இந்த முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த தொடரின் முதல் போட்டியே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kane Williamson DC vs SRH

- Advertisement -

அதனைத் தொடர்ந்து அடுத்த இரு மாதங்களுக்கு சுவாரசியத்திற்கு சற்றும் குறைவின்றி ஐபிஎல் தொடரானது நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னதாக இந்த ஐபிஎல் தொடரில் குறித்த பல்வேறு கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியில் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணி பிளேஆப் சுற்றுக்கு செல்லாது என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : டெல்லி அணியில் எந்தெந்த வீரர்களுக்கு என்னென்ன பணிகள் என்ற தெளிவு இதுவரை இல்லாமல் உள்ளது.

DC vs PBKS 2

அவர்களின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? என்பது குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் ரிஷப் பண்ட் இடம்பெறாததால் வார்னர் கேப்டனாகவும், துவக்க வீரராகவும் இருப்பார். அதே வேளையில் பிரித்வி ஷா அவருடன் ஓப்பனிங் செய்யும் போது மிட்சல் மார்ஷ் மூன்றாவது வீரராக விளையாடுவார்.

- Advertisement -

இப்படி இவர்கள் மூன்று பேரும் ஆடும்போது மிடில் ஆர்டரில் எவ்வாறு பேட்டிங் வரிசை அமையும் என்பதும் பந்துவீச்சாளர்களில் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்வார்கள் என்பதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அக்சர் பட்டேல் துணைக்கேப்டனாக இருப்பதால் அவரும் குல்தீப் யாதவும் நிச்சயமாக அணியில் விளையாடுவார்கள்.

இதையும் படிங்க : IPL 2023 : காயமடைந்த ஸ்ரேயாஸ்க்கு பதிலாக எதிர்பாரா புதிய கேப்டனை அறிவித்த கொல்கத்தா – ரசிகர்கள் வியப்பு

மீதமுள்ள 3 வேகப்பந்து வீச்சாளர்களை எப்படி தேர்வு செய்யப் போகிறார்கள்? என்கிற குழப்பம் உள்ளது. ஏற்கனவே டெல்லி அணி கோப்பை அருகில் வரை சென்று கைவிட்டிருந்தாலும் இம்முறை பிளேஆப் சுற்றுக்கு கூட செல்லாது என ஆகாஷ் சோப்ரா வெளிப்படையாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement