ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அந்நாட்டில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய அணி பங்கேற்கே இருக்கிறது. இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரை முடித்த கையோடு இந்திய அணி அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற உள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்த தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் அனைவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அடுத்ததாக முதன்மை இந்திய அணியானது ஆசிய கோப்பை தொடர், 50 ஓவர் உலக கோப்பை தொடர் என அடுத்தடுத்து பெரிய தொடர்களில் பங்கேற்க இருப்பதினால் சீனியர் வீரர்களுக்கு முற்றிலுமாக ஓய்வு வழங்கப்பட்டு பும்ரா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி இந்த அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்காக அறிவிக்கப்பட்டது.
இந்த இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் ஒருசில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
அந்த வகையில் இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு இடம் கொடுக்கப்பட்டாலும், கொல்கத்தா அணிக்காக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்கரவர்த்திக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை? என்று ரசிகர்கள் தங்களது கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
ஏனெனில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் வாஷிங்டன் சுந்தர் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அதோடு காயம் காரணமாக அவர் பாதி தொடரிலேயே வெளியேறி இருந்தார். அதே வேளையில் இந்த ஐபிஎல் தொடர் முழுவதுமே அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்கரவர்த்திக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என தமிழக ரசிகர்கள் தங்களது கோபத்தினை வெளிக்காட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க : நான் ரொம்ப பிரஷர்ல இருந்தேன். அப்போ தோனி தான் எனக்கு நம்பிக்கையை கொடுத்தாரு – ரஹ்மனுல்லா குர்பாஸ் நெகிழ்ச்சி
ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா : வருண் சக்கரவர்த்தி மீண்டும் இந்திய அணியில் விளையாடத் தகுதியானவர் என்பதை நிரூபித்திருக்கிறார் என்று கூறியிருந்த வேளையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது அனைவரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.