வெறும் 6 ரன்ஸ் 3 விக்கெட்ஸ்.. மேட்ச் வின்னராக நடராஜன்.. திருச்சியை வீழ்த்தி பிளே ஆஃப் சென்ற திருப்பூர் 

TNPL 26
- Advertisement -

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ஜூலை 27ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு திண்டுக்கல்லில் உள்ள என்பிஆர் காலேஜ் மைதானத்தில் 26வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் திருச்சி சோழாஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற திருச்சி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய திருப்பூர் மிகவும் போராடி 20 ஓவரில் 169/8 ரன்கள் குவித்தது. சொல்லப்போனால் அந்த அணிக்கு அமித் சாத்விக் 18, துஷார் ரகிஜா 5, ராதாகிருஷ்ணன் 10, பாலச்சந்தர் அனிருத் 19, கேப்டன் சாய் கிசோர் 1 ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 67/6 என தடுமாறிய அந்த அணி 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

மேட்ச் வின்னர் நடராஜன்:
ஆனால் லோயர் மிடில் ஆர்டரில் நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடிய மான் பப்னா 50 (35) ரன்களும் கணேஷ் 39 (37), ரோஹித் 13* (6) ரன்களும் அடித்து காப்பாற்றினர். திருச்சி சார்பில் அதிகபட்சமாக அதிசயராஜ் டேவிட்சன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 170 ரன்களை துரத்திய திருச்சிக்கு வசீம் அகமது 10, ராஜ்குமார் 8, சியாம் சுந்தர் 1 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

அதனால் 31/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணியை சஞ்சய் யாதவ் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் ஜோடி சேர்ந்து காப்பாற்ற முயற்சித்தனர். அப்போது சஞ்சய் யாதவை 16 ரன்களில் காலி செய்த சாய் கிஷோர் அடுத்ததாக வந்த ஜாபர் ஜமாலை டக் அவுட்டாக்கினார். அடுத்த சில ஓவரில் மறுபுறம் 46 (32) ரன்கள் குவித்து சவாலை கொடுத்த நிர்மல் குமாரை நடராஜன் அவுட்டாக்கினார்.

- Advertisement -

அதோடு நிற்காத அவர் அடுத்ததாக வந்த ராஜ்குமாரை 19 (7) ரன்களிலும் ஆண்டனி தாஸை 4 ரன்களிலும் அவுட்டாக்கி திருச்சியை மடக்கிப் பிடித்தார். அதிலிருந்து மேற்கொண்டு மீள முடியாத திருச்சி 16.5 ஓவரில் 122 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பரிதாபமாக தோற்றது. அதனால் 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற திருப்பூருக்கு அதிகபட்சமாக நடராஜன் 3, அஜித் ராம் 3, கேப்டன் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதையும் படிங்க: 33/2 என வெ.இ திணறல்.. பிரையன் லாராவின் வாழ்நாள் சாதனையை தூளாக்கிய ஜோ ரூட்.. சச்சின் சாதனையும் தகர்ப்பு

குறிப்பாக நம்பிக்கை நட்சத்திரம் நடராஜன் 3 ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை 2.00 என்ற துல்லியமான எக்கனாமியில் எடுத்தார். அந்த வகையில் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய நடராஜன் ஆட்டநாயக்கன் விருது வென்று தன்னை மேட்ச் வின்னர் என்பதை மீண்டும் நிரூபித்தார். இதையும் சேர்த்து 7 போட்டிகளில் 4வது வெற்றியை பதிவு செய்த திருப்பூர் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. மறுபுறம் 7 போட்டிகளில் நான்காவது தோல்வியை பதிவு செய்த திருச்சி லீக் சுற்றுடன் நாக் அவுட்டாகி வெளியேறியது.

Advertisement