இப்போலாம் நாட்டுக்காக விளையாடுறத விட வீரர்களுக்கு இதுதான் முக்கியமா இருக்கு – டிம் சவூதி கருத்து

Southee-1
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற்று வருவதை போல உலகெங்கிலும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் பல்வேறு டி20 தொடர்கள் பிரபலமாக நடைபெற்று வருகின்றன. இந்த தொடர்களில் விளையாடுவதால் வீரர்களுக்கு குறுகிய காலத்திலேயே அதிக அளவில் பணம் கொட்டிக் கொடுக்கப்படுகிறது.

boult

- Advertisement -

இதன் காரணமாக சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை காட்டிலும் இதுபோன்ற பணம் கொழிக்கும் வெளிநாட்டு தொடர்களில் விளையாடுவதில் வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே நியூசிலாந்து வீரர்கள் பல்வேறு வீரர்கள் உலகெங்கிலும் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இவ்வேளையில் நியூசிலாந்து வீரர்கள் பலர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி டி20 லீக்குகளின் பக்கம் நகர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நியூசிலாந்து அணியிலும் தற்போது மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ட்ரென்ட் போல்ட், மார்ட்டின் குப்தில், ஜிம்மி நீஷம் போன்ற வீரர்கள் வெளியேறியுள்ளனர்.

southee

மார்ட்டின் குப்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் பிக் பேஷ் தொடரில் விளையாட இருக்கிறார். அதேபோன்று ட்ரென்ட் போல்ட்டும் பல்வேறு தொடர்களில் விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்த சூழல் குறித்து பேசியுள்ள நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டிம் சவூதி கூறுகையில் :

- Advertisement -

கடந்த சில மாதங்களாகவே கிரிக்கெட்டின் சூழ்நிலை முற்றிலுமாக மாறி உள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் நான் உள்ளேன். ஆனாலும் ஐபிஎல் விளையாட இருக்கிறேன். எதிர்வரும் ஆண்டுகளில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க : நீங்க ரிட்டையரே ஆகவேண்டாம், நாங்க எங்க வேலையை பாத்துகிறோம் – சீனியர்களை டாட்டா காட்டும் பிசிசிஐ

ஆனால் முன்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கிரிக்கெட் சூழல் தற்போது முற்றிலும் மாறிவிட்டது. உண்மையை சொல்லப்போனால் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது குறித்து நான் யோசிக்கவில்லை என்று டிம் சவுதி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement