நான் 19 வயசுல இருந்தே அவரை பாத்துட்டு வரேன். இனிமே தான் அவர் வெறித்தனமா ஆடப்போறாரு – டிம் சவூதி

Southee-1
- Advertisement -

நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுதி கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 81 டெஸ்ட் போட்டிகள், 143 ஒருநாள் போட்டிகள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 14 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் டிம் சவூதி விராட் கோலியை நன்கு அறிந்தவர் என்றே கூறலாம். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டை தவிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அவர் விராட் கோலியுடன் பயணித்துள்ளார்.

southee 1

- Advertisement -

அதேவேளையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலக கோப்பை தொடரில் இருந்து தற்போது வரை டிம் சவுத்தி விராட் கோலிக்கு எதிராக களத்தில் மல்லுக்கட்டி வருகிறார். மைதானத்தில் இருவருக்கும் இடையே மோதல் இருந்தாலும் களத்திற்கு வெளியில் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.

அந்த வகையில் விராட் கோலி குறித்து தற்போது பேசியுள்ள டிம் சவுதி கூறுகையில் : நான் உறுதியாக சொல்கிறேன் விராட் கோலி தோள்களில் இருந்து தற்போது கேப்டன்சி என்கிற பாரம் இறங்கியுள்ளதால் இனிவரும் நாட்களில் விராட் கோலி இன்னும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தப்போகிறார். அவருடைய சுமை தற்போது குறைந்துள்ளதால் அதனுடைய தாக்கம் நிச்சயம் இனிவரும் போட்டிகளில் அற்புதமான ஆட்டங்களாக வெளிப்படும் என்று கூறியுள்ளார்.

southee

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : கோலியை போன்ற ஒரு வீரரை நீங்கள் பார்ப்பது அரிது. ஏனெனில் அவர் கிரிக்கெட் மீது வைத்துள்ள அர்ப்பணிப்பு மற்றும் காதல் அபரிவிதமானது. மேலும் எப்போது அவர் விளையாடினாலும் தனது முழு உத்வேகத்துடன் போட்டிகளில் கலந்து கொள்கிறார். பெங்களூர் அணிக்காக அவர் அருகில் இருந்து நிறைய விடயங்களை பார்த்திருக்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : என்னோட கரியரில் நான் பந்துவீச கஷ்டப்பட்ட 2 பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான் – ஷதாப் கான் தேர்வு

எப்போதுமே கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமே அவர் சிந்திப்பவர் அவர். விராட் கோலியை நான் என்னுடைய இளம் வயதிலிருந்தே பார்த்து வருகிறேன். நிச்சயம் அவர் இனிவரும் போட்டிகளில் இந்திய அணிக்காகவும் சரி, ஐபிஎல் தொடரிலும் சரி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தப்போகிறார் என டிம் சவூதி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement