என்னோட கரியரில் நான் பந்துவீச கஷ்டப்பட்ட 2 பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான் – ஷதாப் கான் தேர்வு

Shadab
- Advertisement -

பாகிஸ்தான் அணியை சேர்ந்த இளம் ஆல்ரவுண்டரான ஷதாப் கான் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமாகி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாடி வருகிறார். தான் அறிமுகமான சமயத்திலிருந்தே தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். பாகிஸ்தான் அணியின் முதன்மை லெக் ஸ்பின்னரான இவர் பேட்டிங்கிலும் அதிரடி காட்டும் திறன் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகள் 48 ஒருநாள் போட்டிகள் மற்றும் 64 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் பாகிஸ்தான் அணியின் துணை கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். மேலும் பாகிஸ்தானில் ஆண்டுதோறும் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஒரு அணிக்கு கேப்டனாகவும் தலைமை தாங்கி வருகிறார்.

- Advertisement -

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இதுவரை கிட்டத்தட்ட 5 ஆண்டுகளில் 110 சர்வதேச போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள அவர் தற்போது சமூகவலைத்தளம் மூலமாக ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்வியில் : நீங்கள் பந்துவீசியதிலேயே கடினமான பேஸ்மெண்ட் யார்? என்ற கேள்வியை எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஷதாப் கான் : சற்றும் யோசிக்காமல் இந்திய அணியைச் சேர்ந்த துவக்க வீரர் ரோகித் சர்மா மற்றும் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான டேவிட் வார்னர் ஆகியோரின் பெயரையும் பதிவிட்டுள்ளார். இந்திய அணிக்காக அதிரடியாக விளையாடி வரும் ரோஹித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டைசதங்கள் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : 2021 ஆம் ஆண்டிற்கான பெஸ்ட் டி20 பிளேயிங் லெவன் இதுதான். கோலி ரோஹித்துக்கு இடமில்லை – டேனிஷ் கனேரியா

அதே போன்று மற்றொரு வீரரான டேவிட் வார்னர் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் 289 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றது மட்டுமின்றி தொடர்நாயகன் விருதையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement