2021 ஆம் ஆண்டிற்கான பெஸ்ட் டி20 பிளேயிங் லெவன் இதுதான். கோலி ரோஹித்துக்கு இடமில்லை – டேனிஷ் கனேரியா

Kaneria
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான டேனிஷ் கனேரியா அவ்வப்போது சமூக வலைதளம் மூலமாக கிரிக்கெட் குறித்த தனது பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் இந்த 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த டி20 கிரிக்கெட் பிளேயிங் லெவனை அவர் தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். இதில் அனைத்து நாடுகளைச் சேர்ந்த வீரர்களையும் வைத்து அவர் ஒட்டுமொத்தமாக ஒரு அணியை தேர்வு செய்து இதனை வெளியிட்டு இருக்கிறார். இந்த அணியில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கே இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Azam

- Advertisement -

அதன்படி நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றோடு வெளியேறியதன் காரணமாக மிகப்பெரும் சரிவை சந்தித்த நிலையில் பாகிஸ்தான் அணி அரையிறுதி வரை முன்னேறி அசத்தி இருந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களான முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோரை துவக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளார். மேலும் இந்த 2021ஆம் ஆண்டு முழுவதுமே இவர்கள் சிறப்பாக விளையாடி உள்ளதால் அவர்களை துவக்க வீரர்களாக தேர்வு செய்வதாக அறிவித்தார்.

அதனை தொடர்ந்து 3-வது வீரராக ரோகித் அல்லது கோலி ஆகிய இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் யாரும் எதிர்பாராத விதமாக இந்த உலக கோப்பை தொடரில் சதமடித்து அசத்திய ஜாஸ் பட்லரை மூன்றாம் வீரராக கனேரியா தேர்வு செய்துள்ளார். மேலும் அடுத்த 4 மற்றும் 5 ஆவது இடங்களில் லிவிங்ஸ்டன் மற்றும் மிட்சல் மார்ஷ் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். அதேபோன்று ஆல் ரவுண்டர்களாக 6) ரவீந்திர ஜடேஜா மற்றும் 7) அஷ்வின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Shaheen-afridi-1

பந்துவீச்சாளர்களாக 8) ஷாஹீன் அஃப்ரிடி, 9) டிரென்ட் போல்ட், 10) பும்ரா மற்றும் 11) ஆடம் ஜாம்பா ஆகியோரை தெரிவு செய்துள்ளார். அதோடு அணியின் 12 வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டை அவர் தேர்வு செய்துள்ளார். டேனிஷ் கனேரியா தேர்வு செய்த 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த டி20 பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய பவுலர்களில் இவர் ஒருவரால் மட்டுமே எங்களை மிரட்ட முடியும் – தெ.ஆ கேப்டன் ஓபன்டாக்

1) முகமது ரிஸ்வான், 2) பாபர் அசாம், 3) ஜாஸ் பட்லர், 4) லியாம் லிவிங்ஸ்டன், 5) மிட்சல் மார்ஷ், 6) ரவீந்திர ஜடேஜா, 7) அஷ்வின், 8) ஷாஹீன் அப்ரிடி, 9) ட்ரென்ட் போல்ட், 10) பும்ரா, 11) ஆடம் ஜாம்பா (12ஆவது வீரர் ரிஷப் பண்ட்).

Advertisement