இந்தியாவில் விளையாடுறது மாதிரி ஈஸியா ஆடுறாங்க. உண்மையிலே இந்தியா தான் டாப் – மனம்திறந்த நியூசி வீரர்

Southee
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

IndvsNz

- Advertisement -

இந்நிலையில் மூன்றாவது டி20 போட்டி இன்று ஹாமில்டன் நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்ற நோக்கத்துடன் இந்திய அணியும், அதேவேளையில் தோல்வியடைந்தால் தொடரை இழக்க நேரிடும் அதனால் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற கட்டாயத்தில் நியூசிலாந்து அணியும் களம் இறங்குகிறது.

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுதி இந்திய அணி குறித்து ஒரு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : இந்திய அணி தற்போது சிறப்பாக விளையாடி வருகிறது. எப்போதுமே இந்திய அணி ஒரு சிறந்த அணிதான் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்கள். இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக உள்ளனர்.

Rahul-2

முதல் போட்டியில் நாங்கள் போட்டியில் கிட்டத்தட்ட நெருங்கி வந்தோம். ஆனால் இரண்டாவது போட்டியில் ஒட்டு மொத்தமாக வெளியேற்றப்பட்டோம். இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது எப்போதும் கடினமானதாகவே இருக்கும். சொந்த மண்ணில் விளையாடுவது போல வெளிநாட்டு மண்ணிலும் தற்போது இந்திய அணி சிறப்பாக உருவெடுத்து வருகிறது. இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்றால் நாங்கள் டாப் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்று சவுதி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement