மோசமான சாதனை படைத்த மிர்பூர் டெஸ்ட்.. வாழ்நாளில் இப்படி ஒன்றை பாத்ததில்லை.. என சௌதீ விமர்சனம்

Tim Southee
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023 உலகக் கோப்பையை முடித்துக்கொண்டு பக்கத்தில் உள்ள வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது அதில் முதல் போட்டியில் வென்ற வங்கதேசம் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் ஆரம்பத்திலேயே பின்தங்கிய நியூஸிலாந்து டிசம்பர் 6ஆம் தேதி துவங்கிய 2வது போட்டியில் போராடி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அதன் காரணமாக 1 – 1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்த நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக வங்கதேசத்திடம் சந்திக்க வேண்டிய தோல்வியிலிருந்து தப்பியது. மறுபுறம் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்ட வங்கதேசம் வலுவான நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வெல்லும் அற்புதமான வாய்ப்பை தவற விட்டது.

- Advertisement -

மோசமான உலக சாதனை:
முன்னதாக வங்கதேச தலைநகர் தாக்காவில் உள்ள மிர்பூரில் நடைபெற்ற அப்போட்டி டிசம்பர் 6ஆம் தேதி துவங்கியது. ஆனால் அதில் முதல் நாளிலிருந்தே பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்ததால் வங்கதேசம் 172, 144, நியூசிலாந்து 180, 139/6 என 2 அணிகளும் ஒரு முறை கூட 200 ரன்களை தாண்டவில்லை. குறிப்பாக முதல் நாளிலேயே 15 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் 2வது நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 3வது நாளின் மதியத்திற்குள் முடிவு கிடைத்து விட்டது. சொல்லப்போனால் இரு அணிகளும் சேர்ந்து இந்த போட்டியில் வெறும் 1069 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டது. இதன் வாயிலாக வங்கதேச மண்ணில் பந்துகள் அடிப்படையில் மிகவும் விரைவாக நடைபெற்று முடிந்த போட்டியாக இந்த 2வது டெஸ்ட் மோசமான சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

இதற்கு முன் இதே மைதானத்தில் 2018ஆம் ஆண்டு வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதிய போட்டி 1287 பந்துகளில் முடிந்ததே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் ஒன்றரை நாளில் முடிந்த இப்போட்டியின் பிட்ச் தம்முடைய வாழ்நாளில் பார்த்ததிலேயே மிகவும் மோசமானது என்று நியூசிலாந்து கேப்டன் டிம் சௌதீ நாடு திரும்புவதற்கு முன்பாக விமர்சித்தது பின்வருமாறு.

இதையும் படிங்க: அவரை என்ன சொல்லி பாராட்டுறதுன்னே தெரியல.. இந்திய வீரருக்கு கிறிஸ் கெயில் பாராட்டு

“இந்த பிட்ச்சை பற்றி சொல்வதற்கு எனக்கு நிறைய வழிகள் இருக்கிறது. இப்போட்டி வெறும் 170 ஓவர்களில் முடிந்ததே பிட்ச் எப்படி இருந்தது என்பதை காண்பிக்கிறது. அது நன்றாக இல்லை. அதில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமான போட்டி இருக்கவில்லை. கிட்டத்தட்ட இது என்னுடைய கேரியரில் நான் பார்த்த பிட்ச்களில் மிகவும் மோசமான ஒன்று” என்று கூறினார்.

Advertisement