முன்னாள் ஜாம்பவான் பிரைன் லாராவின் சாதனையை முறியடித்த டிம் சவுதி – விவரம் இதோ

Southee
- Advertisement -

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது அண்மையில் நிறைவடைந்தது. இந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியானது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரின் கடைசி போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை :

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 602 ரன்கள் குவித்த டிக்ளர் செய்தது. அதனை தொடர்ந்து தங்களது முதலில் இன்னிங்க்ஸை விளையாடிய நியூசிலாந்து அணியானது இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 88 ரன்களில் ஆல் அவுட்டாகியது.

- Advertisement -

அதன் காரணமாக பாலோ ஆன் ஆனதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சிலும் 360 மட்டுமே குவித்து ஆல் அவுட்டானது. இதன் காரணமாக இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது நியூசிலாந்து அணி தோல்வியை தழுவினாலும் அந்த அணியின் கேப்டன் டிம் சவுதி சர்வதேச கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளார். அந்த வகையில் அவர் படைத்த சாதனை யாதெனில் :

- Advertisement -

இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விளாசியை ஏழாவது வீரர் என்ற பெருமையை அவர் படைத்துள்ளார். இந்த போட்டிக்கு முன்னதாக பிரைன் லாரா மற்றும் நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுதி ஆகியோர் 88 சிக்ஸர்களை விளாசி எட்டாவது இடத்திலிருந்தனர்.

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் வெற்றிக்கு இந்த மாதிரி பவுலர் தான் வேணும்.. பராஸ் மாம்ப்ரே பேட்டி

இவ்வேளையில் இந்த போட்டியில் ஒரு சிக்சர் அடித்த சவுதி 89 சிக்ஸர்களுடன் தற்போது ஏழாவது இடத்தை பிடித்துள்ளார். அதேசமயம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 131 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான பிரண்டன் மெக்கல்லம் 107 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement