ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் வெற்றிக்கு இந்த மாதிரி பவுலர் தான் வேணும்.. பராஸ் மாம்ப்ரே பேட்டி

Paras Mhambrey
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் வரும் நவம்பர் மாதம் துவங்கும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான திட்டங்களை இப்போதே இந்தியா வகுத்து வருகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய இரண்டு தொடர்களையும் இந்தியா வென்றது. எனவே இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது.

அந்தத் தொடரில் முழுமையாக விளையாட வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஷமி அவசரப்பட்டு கம்பேக் கொடுக்காமல் இருந்து வருகிறார். அதே போல ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு சமீபத்திய துலீப் கோப்பை, இலங்கை சுற்றுப்பயணத்தில் முழுமையாக ஓய்வு கொடுக்கப்பட்டது. அவர்களுடன் ஜோடியாக விளையாடப் போகும் சிராஜ் முழுமையாக ஃபிட்டாக இருந்து வருகிறார்.

- Advertisement -

4வது பவுலர்:

அதனால் ஷமி, பும்ரா, சிராஜ் ஆகியோர் ஆஸ்திரேலிய மண்ணில் விளையாட தயாராக உள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் தொடரில் அந்த மூவருடன் சேர்ந்து விளையாட ஆகாஷ் தீப் சரியான வேகபந்து வீச்சாளர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார். கடந்த இங்கிலாந்து தொடரில் அறிமுகமாகி 3 விக்கெட்டுகள் எடுத்த ஆகாஷ் தீப் தற்போதைய வங்கதேச தொடரிலும் அசத்தி வருகிறார்.

எனவே பெரிய ஆஸ்திரேலிய தொடரில் ஷமி, பும்ராவுக்கு ஓய்வெடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் அந்த இடத்தை ஆகாஷ் தீப் நிரப்பும் திறமையை கொண்டுள்ளார் என்று மாம்ப்ரே தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆகாஷ் உள்ளூர் கிரிக்கெட்டில் நிறைய பந்து வீசியுள்ளதால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து வைத்துள்ளார்”

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் ஆகாஷ் தீப்:

“அவர் பெரும்பாலும் பந்தின் சீம் பகுதியை சார்ந்திருக்கிறார். ஆஸ்திரேலியாவில் சீம் பகுதியை பயன்படுத்தி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அவரைப் போன்ற பவுலர்கள் தான் உங்களுக்கு தேவை. பும்ரா போன்றவர் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்பி விளையாடுவதற்காக நாம் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். ஆனால் பெரிய தொடரின் நடுவே ஷமி, பும்ராவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்”

இதையும் படிங்க: மும்பைக்கு டாட்டா சொல்லுங்க.. ரோஹித் சர்மாவை ஆர்சிபி வாங்கனும்.. காரணம் இது தான்.. ஃகைப் அட்வைஸ்

“அப்போது தான் ஆகாஷ் தீப் போன்ற ஒருவரின் தேர்வு உதவி செய்யும். அர்ஷ்தீப் சிங் இன்னும் உள்ளூர் கிரிக்கெட்டில் அதிகமாக விளையாடி வளர வேண்டும். ஆனால் யாஷ் தயாள் பிட்ச்சில் அடிக்கக் கூடியவராக இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் முதல் இன்னிங்ஸில் பிட்ச்சில் அடித்து சீம் மூவ்மெண்டை பெறக்கூடிய பவுலர்கள் தான் உங்களுக்கு தேவை. கூகபுரா பந்துகள் முதல் 30 ஓவர்கள் வீசச் சிறந்தவை. அதன் பின் சூழ்நிலைகள் சீராக மாறும்” என்று கூறினார்.

Advertisement