
கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான 18-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டியானது எதிர்வரும் ஜூன் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் நிலவி வந்த வேளையில் அதற்கு இன்னும் சில நாட்களில் முடிவு தெரிந்துவிடும்.
மேலும் இந்த தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகளில் விளையாட குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுவிட்டன. இதன் காரணமாக மற்ற அணிகள் அனைத்தும் தற்போது கடைசி கட்ட லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றன.
இன்னும் சில தினங்களில் பிளே ஆப் சுற்று போட்டிகள் ஆரம்பித்து விடும் என்பதனால் இந்த தொடரானது தற்போது மேலும் விறுவிறுப்பை கூட்டியுள்ளது. இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் சூழல் காரணமாக ஒரு வாரம் ஐபிஎல் தொடரானது நிறுத்தி வைக்கப்பட்டதால் போட்டி அட்டவணையில் சில மாற்றங்கள் ஏற்பட்டன.
இதன் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் பலர் இந்த எஞ்சியுள்ள ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறினர். ஏனெனில் சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதற்காக அவர்கள் நாடு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த வகையில் தற்போது ஆர்சிபி அணியில் இடம் பிடித்து விளையாடி வரும் ஜேக்கப் பெத்தலும் கடைசி லீக் போட்டி மற்றும் பிளே ஆப் சுற்றுக்கான ஆர்.சி.பி அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.
ஏனெனில் அடுத்ததாக இங்கிலாந்து அணி விளையாட இருக்கும் தொடரில் அவர் தேர்வாகியுள்ளதால் அவர் அணியிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவருக்கு பதிலாக மாற்று வீரராக நியூசிலாந்து அணியை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டிம் சைபர்ட்டை பெங்களூரு 2 கோடி ரூபாய் என்கிற சம்பளத்தின் அடிப்படையில் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதையும் படிங்க : முரட்டு தனமான ஹிட்டிங் பார்முக்கு வந்துள்ள சூரியகுமார் யாதவ்.. பவுமாவின் சாதனையை சமன்செய்து அசத்தல்
டி20 போட்டிகளை பொருத்தவரை டிம் சைபர்ட் ஒரு விக்கெட் கீப்பர் என்பது மட்டுமின்றி பேட்டிங்கிலும் துவக்க வீரராக களமிறங்கி அதிரடியாக ரன் குவிக்கும் திறமையுடையவர். ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளை பொறுத்தவரை கிட்டதட்ட 250 போட்டிகளில் விளையாடி 4 செஞ்சுரி உட்பட 5000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.