மிட்சல் மார்ஷை தொடர்ந்து மற்றொரு நட்சத்திர வீரருக்கும் கொரோனா உறுதி – சிக்கலில் டெல்லி கேபிட்டல்ஸ்!

DC
- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகெங்கிலும் பரவி வந்த கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்திய ரசிகர்கள் ஐபிஎல் தொடரை இந்திய மண்ணில் தவற விட்டதன் காரணமாக இந்த ஆண்டு நிச்சயம் இங்குதான் ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற வேண்டும் என்று பி.சி.சி.ஐ-யிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

IPL 2022 (2)

- Advertisement -

அந்த வகையில் பி.சி.சி.ஐ-யும் தங்களது தீவிர முயற்சியின் காரணமாக சரியான திட்டமிடலுடன் கூடிய அட்டவணையை வெளியிட்டு போட்டிகளை தற்போது சிறப்பாக நடத்தி வருகிறது. ஆனால் இந்த தொடரில் முதல் முறையாக தற்போது கொரோனா மூலம் இடையூறு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே டெல்லியைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் முதலாவது வீரராக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட டெஸ்டில் டெல்லி அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக டெல்லி அணி வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வேறு எங்கும் செல்லாமல் மும்பையிலேயே தங்கவைக்கப்பட்டனர். அதோடு அவர்களுக்கு தொடர்ந்து பரிசோதனை நடத்தப்பட்டது.

seifert

இந்த பரிசோதனை முடிவில் அனைவருக்கும் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தால் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும் என்று கூறப்பட்டது. அதன் காரணமாக டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் இந்த வேளையில் தற்போது சரியான பாதுகாப்புடன் டெல்லி அணி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறது.

- Advertisement -

ஆனாலும் மிச்செல் மார்ஷை தொடர்ந்து டெல்லி அணியை சேர்ந்த மற்றொரு வெளிநாட்டு வீரரான டிம் சைபர்ட்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் தற்போது இரண்டாவது முறையாக பாதிக்கப்பட்டுள்ளார். அதே வேளையில் நோர்க்கியாவும் காயம் காரணமாக டெல்லி அணியில் விளையாட முடியாத சூழலில் உள்ளார்.

இதையும் படிங்க : லக்னோ அணியின் கேப்டன் ராகுலுக்கு 20% அபராதம். ஸ்டோய்னிஸ்க்கு கண்டிப்பு – ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி

இப்படி டெல்லி அணியில் உள்ள பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் தற்போது அணியில் விளையாட முடியாமல் தவித்து வருகின்றனர். இது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவு என்றே கூறலாம். இருப்பினும் தற்போது வரை இந்த தொடரில் பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டெல்லி அணியானது தாக்குப் பிடித்து விளையாடும் அளவிற்கு நம்பிக்கையான ஒரு அணி என்றே கூறலாம்.

Advertisement