லக்னோ அணியின் கேப்டன் ராகுலுக்கு 20% அபராதம். ஸ்டோய்னிஸ்க்கு கண்டிப்பு – ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி

Stoinis
Advertisement

ஐபிஎல் தொடரின் 31-ஆவது லீக் ஆட்டம் நேற்று மும்பை டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் டூபிளெஸ்ஸிஸ்-சின் அபார ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 181 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டு பிளேசிஸ் 96 ரன்களும், சபாஷ் அகமது 26 ரன்களும் குவித்தனர்.

Faf Du Plessis 96

அதனை தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 163 ரன்களுக்கு ஆட்டமிழக்க 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய லக்னோ அணியின் கேப்டன் ராகுலுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதோடு லக்னோ அணியின் ஆல் ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ்-க்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி திடீரென லக்னோ அணியின் கேப்டன் ராகுலுக்கு 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது ஏன் என்பது குறித்த கேள்வியே அனைவரது மத்தியிலும் உள்ளது. அதற்கான விளக்கத்தை இந்த பதிவில் நீங்கள் தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.

stoinis 1

அந்த வகையில் நேற்றைய போட்டியின் போது ராகுலும் சரி, ஸ்டாய்னிஸ்-சும் சரி ஆட்டமிழந்து வெளியேறும்போது எதிரணி வீரர்களை வார்த்தைகளால் வசை பாடினார். அதிலும் குறிப்பாக ஸ்டாய்னிஸ் அம்பயரின் முடிவின் மீது கூட தனது அதிர்ப்தியினை வெளிப்படுத்தியிருந்தார். இது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக பதிவாகியது. ஆனால் கேப்டன் ராகுலுக்கு மட்டும் 20% போட்டி ஊதியத்தில் இருந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஸ்டாய்னிஸ்-ற்கு எச்சரிக்கை மட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதற்கு காரணம் யாதெனில் : ஐபிஎல் வரம்பு மீறுதல் விதிமுறைப்படி இப்படி எதிரணி வீரர்களை இதுபோன்று வசைபாடும் போது முதல் முறை எச்சரிக்கை விடப்படும். அதே அணியின் கேப்டன் இந்த காரியத்தை செய்து இருந்தால் அவருக்கு அபராதம் விதிக்கப்படும் அந்த வகையில்தான் தற்போது ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : என்னுடைய சாதனையை அவரால் தான் உடைக்க முடியும் – ஆசையுடன் அமித் மிஸ்ரா ஓப்பன் டாக்

அதேவேளையில் ஸ்டாய்னிஸ்க்கு அபராதம் விதிக்கப்படாமல் கண்டித்து விடப்பட்டுள்ளார். ஆனால் இது முதல் முறை என்பதால் எச்சரிக்கை மட்டும் விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் அவர் அடுத்த முறையும் இதே போன்று எதிரணி வீரர்களை வசைபாடும் வகையில் பேசினால் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement