என்னுடைய சாதனையை அவரால் தான் உடைக்க முடியும் – ஆசையுடன் அமித் மிஸ்ரா ஓப்பன் டாக்

Mishra
- Advertisement -

பல பரபரப்பான திருப்பங்களுடன் மும்பை நகரில் மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான 3-வது வரத்தைக் கடந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. அந்த வகையில் 2008-ஆம் கோலாகலமாக துவக்கப்பட்ட ஐபிஎல் வரலாற்றின் முதல் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்து 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் ஜொலிக்கிறது.

கேப்டன் சஞ்சு சாம்சன் தலைமையில் வெற்றி நடை போட்டு வரும் அந்த அணிக்கு பேட்டிங் துறையில் இங்கிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் ஒவ்வொரு போட்டியிலும் நங்கூரமாக நின்று பெரிய அளவில் ரன்களை சேர்க்க அவருடன் மிடில் வரிசையில் மிரட்டும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சிம்ரோன் ஹெட்மையர் கடைசி நேரத்தில் அதிரடியாக ரன்களை விளாசி வெற்றிகரமான பினிஷிங் செய்து வெற்றிகளை தேடிக் கொடுத்து வருகின்றனர்.

- Advertisement -

கலக்கல் சஹால்:
அதேபோல் அந்த அணியின் பந்துவீச்சில் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் யூஸ்வென்ற சஹால் ஒவ்வொரு போட்டியிலும் தனது தைரியமான மாயாஜால சுழல் பந்து வீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார். அந்த வகையில் இதுவரை 6 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 17 விக்கெட்டுகளை 7.33 என்ற சிறப்பான எகனாமியில் எடுத்து இந்த வருடம் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்து வீச்சாளர்களின் முதலிடத்தை பிடித்து அதற்கு வழங்கப்படும் கவுரவ ஊதா தொப்பியை தன்வசம் வைத்துள்ளார்.

அதிலும் குறிப்பாக கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 218 என்ற மெகா இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு ஆரோன் பின்ச் 58, கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 85 என அதிரடியாக ரன்களை குவித்து வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். குறிப்பாக கடைசி 4 ஓவர்களில் 40 ரன்கள் தேவை என்ற நிலையில் பந்தைக் கையில் எடுத்த சஹால் 17-வது ஓவரின் முதல் பந்தில் வெங்கடேஷ் ஐயரை அவுட் செய்து 4-வது பந்தில் ராஜஸ்தானின் வெற்றிக்கு அச்சுறுத்தலை கொடுத்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரை காலி செய்து 5 மற்றும் 6 ஆகிய பந்துகளில் முறையே சிவம் மாவி மற்றும் பட் கம்மின்ஸ் என அடுத்ததாக களமிறங்கிய பேட்ஸ்மேன்களையும் அடுத்தடுத்து அவுட் செய்து ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார்.

- Advertisement -

அமித் மிஸ்ரா பெருமிதம்:
அதன் காரணமாக வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை சுவைத்த ராஜஸ்தானுக்கு ஹாட்ரிக் உட்பட மொத்தம் 5 விக்கெட்டுகளை எடுத்து துருப்பு சீட்டாக செயல்பட்ட சஹால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் ஹாட்ரிக் எடுத்த 21-வது பவுலர் மற்றும் ராஜஸ்தானுக்காக ஹாட்ரிக் எடுத்த 5-வது பவுலர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

இதை பார்த்த முன்னாள் இந்திய வீரர் அமித் மிஸ்ரா ஐபிஎல் தொடரில் தனது 3 ஹாட்ரிக் விக்கெட்கள் சாதனைகளை சஹால் உடைப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “டியர் சஹால் நேற்றைய போட்டியில் உங்களது அபாரமான செயல்பாடுகளால் எடுத்த ஹாட்ரிக் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் ஒரு சிறந்த லெக் பிரேக் பந்துவீச்சாளர்களுக்கு பிட்ச் மற்றும் கால சூழ்நிலை கைகொடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நிரூபித்துவிட்டீர்கள். நீங்கள் என்னுடைய 3 ஹாட்ரிக் ஐபிஎல் சாதனையை உடைப்பீர்கள் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த பல வருடங்களாக விளையாடி 154 போட்டிகளில் 166 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த 3-வது பவுலராக சாதனை படைத்துள்ள அமித் மிஸ்ரா இந்த வருடம் எந்த அணியும் வாங்காததால் முதல் முறையாக பங்கேற்கவில்லை. பொதுவாக ஐபிஎல் போன்ற பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நிறைந்த தொடரில் ஹாட்ரிக் எனும் அரிதான நிகழ்வை சாத்தியமாக்குவது என்பது ஒரு பவுலருக்கு கடினமான ஒன்றாகும்.

அப்படிப்பட்ட நிலையில் 2008 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் டெல்லி அணிக்காகவும் 2013-ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்காகவும் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை மற்றும் 3 முறை ஹாட்ரிக் எடுத்த அமித் மிஸ்ரா ஒரே பவுலர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை படைத்துள்ளார்.

இதையும் படிங்க : பெங்களூரு அணிக்காக சத்தமில்லாமல் சம்பவங்களை செய்து வரும் இளம்வீரர் – இவரை கவனிச்சீங்களா?

அவருக்கு அடுத்த இடத்தில் மற்றொரு ஜாம்பவான் யுவராஜ் சிங் 2 ஹாட்ரிக் விக்கெட்களுடன் எடுத்துள்ளார். இதுபோன்ற ஹாட்ரிக் விக்கெட்களை எடுப்பதற்கு பிட்ச் மற்றும் கால சூழ்நிலைகளின் உதவி என்பதையும் தாண்டி பரபரப்பான தருணத்தில் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அந்த வகையில் தன்னைப் போலவே ஒரு லெக் பிரேக் பவுலராக அசத்தும் சஹால் தன்னைப்போலவே பிட்ச்சின் உதவியின்றி விக்கெட்டுகளை எடுக்கும் திறமையை பெற்றுள்ளதால் நிச்சயமாக தனது சாதனையை என்று மிஸ்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement