
2018-19 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.
இந்த தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்தது.அந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணியின் கேப்டன் கோலி கடுமையாக ஸ்லெட்ஜ் செய்திருந்தார். அந்த தொடர் முழுவதும் கோலியின் ஆக்ரோஷம் மைதானத்தில் வெளிப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பெயின் கூறுகையில் : கோலி உண்மையில் தைரியமான ஆள் கிடையாது. அவர் பதற்றமானவர், அவர் தன் பதற்றத்தை மறைத்துக் கொள்ளவே தைரியமாக இருப்பது போல் செயல்படுகிறார் என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : கோலி பேட்டிங் செய்யும் போது அவரிடம் எதுவும் பேசக் கூடாது என்பதே எங்களது திட்டம்.
நாங்கள் பேட்டிங் செய்யும் போது அந்தந்த வீரர்களின் முடிவுக்கு விட்டு விடுவோம். அதேபோன்று அந்த போட்டியில் நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது என்னை நோக்கி பெயின் தவறு செய்தால் 2-0 என்ற கணக்கில் நாம் ஜெயிப்போம். அதன்பிறகு என்ன பேசுவார்கள் என்று கோலி கூறினார்.
மேலும் அதுமட்டுமின்றி தற்காலிக கேப்டன் என்றும் ஸ்லெட்ஜ் செய்தார். அதற்கு நான் முதலில் நீங்கள் பேட்டிங் செய்தால்தான் ஜெயிக்க முடியும் என்று கூறினேன். என்னை பொருத்தவரை கோலி ரொம்ப பதற்றமானவர். அவர் அதனை மறைத்துக் கொள்ளவே தன்னை ஆவேசமாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறார்.
மேலும் எதிரியை வீழ்த்த என்னென்ன செய்யமுடியுமோ அதனை செய்ய அவர் தயாராக இருப்பார் மேலும் போட்டியின் இடையே மிக ஆக்ரோஷமானவராக மாறும் சுபாவமும் அவரிடம் உள்ளது. கோலியை பற்றி சிறிதாக அவரை தட்டி விட்டால் போதும் தீ பிடிக்கத் தயாராக இருப்பார் என்று பெயின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.