வாய்ப்பு கொடுத்தால் ஆட்டத்தையே மாத்திடுவாங்க. இவங்க 2 பேரு ரொம்ப டேஞ்சர் – டிம் பெயின் கருத்து

paine
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக நாளை (டிசம்பர் 26) துவங்க உள்ள இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற மும்முரம் காட்டும் என்று தெரிகிறது.

indvsaus

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி இல்லாமல் விளையாட இருக்கும் இந்த எஞ்சிய 3 ஆட்டங்கள் குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் சில இந்திய வீரர்களையும் அவர் பாராட்டி பேசியுள்ளார். வழக்கமாக இந்திய அணியை சீண்டி பேசும் அவர் தற்போது வாழ்த்தி பேசியுள்ளது ஆச்சரியம் அளித்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் :

இந்திய அணியை குறைத்து எடை போட்டுவிட முடியாது. இந்திய அணியின் விராட் கோலி மற்றும் முகமது ஷமி போன்ற அனுபவ வீரர்கள் இல்லை என நினைப்பது நாம் செய்யும் தவறாக அமையலாம். ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்ப கூடிய வல்லமை படைத்த வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர். இரண்டாவது டெஸ்டில் பெரிய மாற்றத்துடன் அந்த அணி களம் இறங்கும் குறிப்பாக ராகுல், பண்ட் மாதிரியான வீரர்கள் கிரீசில் நிலைத்து நின்று விட்டால் அவர்கள் ஆட்டத்தையே இந்தியாவிற்கு சாதகமாக திருப்பி விடுவார்கள்.

Pant 1

மேலும் நாங்கள் போட்டியின் போது வாய்ப்பு கொடுத்தால் ஆட்டத்தையே தங்கள் பக்கம் திருப்பும் திறமையும் அவர்களிடம் உள்ளது எனவும் பெயின் தெரிவித்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினாலும் இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்கள் எடுத்து சுருண்டது இந்த சொதப்பல் காரணமாகவே இந்திய அணி இந்த மோசமான தோல்வியை தழுவியது.

Rahul

இதனால் நாளை (டிசம்பர் 26) துவங்க உள்ள இரண்டாவது போட்டியில் பல மாற்றங்கள் இருக்கும் என்றும் ராகுல், பண்ட் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement