என்னால் எந்த பிரச்சனையும் வேணாம். நானே கேப்டன் பதவியில் இருந்து விலகுறேன் – அதிரடி அறிவிப்பு

Paine
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆசஷ் தொடரிலும் ஆஸ்திரேலிய அணி பங்கேற்க உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரம் காரணமாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் ஓராண்டு தடை விதிக்கப்பட்ட நேரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக டிம் பெயின் நியமிக்கப்பட்டார்.

aus 1

- Advertisement -

அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் கேப்டன் பதவி வகித்து வரும் டிம் பெயின் தற்போது திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கேப்டன் பதவியை துறந்துள்ளார். அவர் ஏற்கனவே டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றபோது பெண் ஒருவர் தனக்கு டிம் பெயின் ஆபாச மெசேஜ்களை அனுப்பியதாக புகார் அளித்திருந்தார்.

ஆனால் அப்போது டிம் பெயின் மீது எந்தவித குற்றமும் இல்லை என ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : இது நம்ப முடியாத முடிவு தான். எனக்கும், என் குடும்பத்திற்கும், கிரிக்கெட்டுக்கும் எடுத்த சரியான முடிவு.

paine 2

அந்த சம்பவம் நடைபெற்ற அப்போதே நான் வருந்தினேன், இன்றும் வருகிறேன். எனது குடும்பத்தினர் என்னை மன்னித்து விட்டனர். இந்த சம்பவம் பொதுவெளியில் தற்போது பேசு பொருளாக மாறிவிட்டது. இதனை சில வாரங்களுக்கு முன்பு நான் கேள்விப்பட்டேன். என்னால் என் மனைவி, குடும்பம் மற்றும் யாரேனும் காயம் பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன். ஆஸ்திரேலிய அணியின் நற்பெயருக்கு என்னால் சேதம் ஏற்பட்டு இருந்தால் வருந்துகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : ராகுல் டிராவிட் எடுத்த இந்த முடிவு எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு – ரிக்கி பாண்டிங் ஓபன்டாக்

இதன் காரணமாக நான் உடனடியாக கேப்டன் பதவியில் இருந்து விலகுவதே சரியான முடிவு என்று நம்புகிறேன். ஆஷஸ் தொடருக்கு முன்னால் நான் எவ்வித சர்ச்சையும் உருவாக்க விரும்பவில்லை என்று கூறி டிம் பெயின் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement