- Advertisement -
இந்திய கிரிக்கெட்

காபாவில் வெச்சு அஸ்வினை ஸ்லெட்ஜ் செஞ்சதுக்கு வருத்தப்படல.. பயத்தால் ஓடிருக்கலாம்.. டிம் பெய்ன்

வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரிலிய மண்ணில் இந்தியா விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் துவங்குகிறது. கடைசியாக நடைபெற்ற 2 தொடர்களையும் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக வென்ற இந்தியா இம்முறை ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

முன்னதாக கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் முதல் போட்டியிலேயே 36க்கு ஆல் அவுட்டான இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. அதனால் 4 – 0 (4) என்ற கணக்கில் இந்தியா படுதோல்வியை சந்திக்கும் என்று பல முன்னாள் வீரர்கள் கணித்தனர். ஆனால் அங்கிருந்து ரகானே தலைமையில் கொதித்தெழுந்த இந்தியா 2 – 1 (4) என்ற கணக்கில் மீண்டும் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

- Advertisement -

வருத்தமில்லாத ஸ்லெட்ஜிங்:

குறிப்பாக 2வது போட்டியில் ரஹானே சதத்தால் இந்தியா வென்று கம்பேக் கொடுத்தது. பின்னர் சிட்னியில் நடைபெற்ற 3வது போட்டியில் தோல்வியை தவிர்ப்பதற்காக இந்தியா போராடியது. அப்போது ஹனுமா விஹாரி – அஸ்வின் ஆகியோர் தங்களுடைய காயத்தையும் தாண்டி டிரா செய்வதற்காக போராடினார்கள். ஆனால் அப்போது காபாவில் நடைபெறும் 4வது போட்டிக்கு வந்து “முடிந்தால் வென்று பாருங்கள்” என்று அஸ்வினை ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பைன் ஸ்லெட்ஜிங் செய்தார்.

ஏனெனில் காபா மைதானத்தில் 32 வருடங்களாக ஆஸ்திரேலியா எந்த அணியிடமும் தோற்றதில்லை. அந்த தைரியத்தில் மோதிப் பாருங்கள் என்று பைன் சவால் விட்டார். அதற்கு “இந்தியாவுக்கு நீங்கள் வந்தால் அதுவே உங்களுடைய கேரியரின் கடைசி போட்டியாக இருக்கும்” என்று அஸ்வின் பதிலடி கொடுத்தார். கடைசியில் அப்போட்டியை டிரா செய்த இந்தியா காபா மைதானத்திலும் அஸ்வின் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலேயே 32 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவில் தோற்கடித்து சரித்திரம் படைத்தது.

- Advertisement -

பயத்துல விளையாடல:

இந்நிலையில் அத்தொடரில் தம்மிடம் விட்ட சவாலில் தோற்று விடுவோம் என்று பயந்தே அஸ்வின் காயம் என்ற பெயரில் காபா போட்டியில் விலகியதாக டிம் பைன் கூறியுள்ளார். இது பற்றிய அவர் பேசியதற்கு பின்வருமாறு. “அப்படி ஸ்லெட்ஜிங் செய்ததற்காக நான் வருந்தவில்லை. ஏனெனில் அந்த நாளுக்கு பின் இதுவரை அஸ்வின் காபாவில் விளையாடவில்லை”

இதையும் படிங்க: பும்ராவால் கூட முடியாது.. ஓவர்நைட்ல பஸ்பால்ன்னு பெயர் வைக்கிறது முக்கியமல்ல.. இதை செய்யணும்.. தோனி கருத்து

“இந்தியர்களிடம் நான் பேசவில்லை. ஆனால் உங்களை காபாவில் எதிர்கொள்ள காத்திருக்க முடியவில்லை என்று அஸ்வினிடம் பேசினேன். ஏனெனில் அற்புதமான கிரிகெட்டரான அவர் அடிக்கடி என்னை அவுட்டாக்கி எரிச்சலூட்டினார். ஆனால் அவரை நேரடியாக தாக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. இருப்பினும் கடைசிப் போட்டியில் அவர் முதுகு வலியால் வெளியேறினார். உண்மையில் அப்போட்டியின் முதல் நாள் அஸ்வின் ஜாகிங் ஓடினார். எனவே முதுகுப் பிடிப்பு அவ்வளவு மோசமாக இருந்திருக்க முடியாது” என்று கூறினார்.

- Advertisement -