பந்து க்ராஸாகும் போது சத்தம் வந்தது. ஆனா. முக்கியமான அந்த எட்ஜ் பந்து குறித்து – டிம் டேவிட் சொன்னது என்ன?

David
Advertisement

நடப்பு ஐபிஎல் தொடரின் முக்கியமான லீக் போட்டி நேற்று டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப்பிற்கு செல்ல முடியும் என்ற கட்டாயத்தில் விளையாடிய டெல்லி அணியானது முதலாவதாக பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 159 ரன்களை குவித்தது. பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது 14.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தது.

Rovman Powell Jasprit Bumrah

அதன் காரணமாக 33 பந்துகளில் 65 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. இக்கட்டான அந்த நேரத்தில் டேவால் பிரேவிஸ் ஆட்டம் இழுந்ததும் டிம் டேவிட் களத்திற்கு வந்தார். வெற்றிக்கு 33 பந்துகளில் 65 ரன்கள் தேவை என்ற போது இவர் களத்தில் இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்றும் அனைவருக்கும் தோன்றியது.

- Advertisement -

அதேபோன்று அதிரடியாக விளையாடி அவர் 11 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் என 34 ரன்கள் அடித்து கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்துவிட்டு ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின்னர் மும்பை அணி எளிதாக இலக்கினை சேஸ் செய்து வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு டிம் டேவிட் முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையல்ல. ஆனாலும் இந்த போட்டியில் தான் சந்தித்த முதல் பந்தே அவர் ஆட்டம் இழக்க வேண்டிய பந்து தான்.

david 1

ஏனெனில் ஷர்துல் தாகூர் வீசிய அந்த பந்தில் முன்வந்து ஆடவைத்த டேவிட் அந்த பந்தை சரியாக அடிக்க முடியாமல் தடுக்க நினைத்தார். ஆனால் பந்து பேட்டில் எட்ஜாகி சென்றது. பந்துவீச்சாளர் தாகூரும் அம்பயரை நோக்கி அப்பீல் செய்ய அம்பயரோ அவுட் கொடுக்கவில்லை. பந்து பேட்டில் பட்ட சத்தம் தெளிவாக கேட்டதால் டெல்லி அணியின் வீரர்கள் கேப்டன் ரிஷப் பண்ட்டிடம் டிஆர்எஸ் எடுக்குமாறு கெஞ்சினர். ஆனால் இறுதி வரை ரிஷப் பண்ட் டி.ஆர்.எஸ் எடுக்காமலேயே விட்டுவிட்டார்.

- Advertisement -

ஆனால் ரிப்ளேவின் போது பந்து பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தது. ஒரு வேளை அந்த பந்தில் டேவிட் ஆட்டமிழந்திருந்தால் மும்பை அணியின் வெற்றியை பறிபோய் இருக்கும் எனலாம். அந்த அளவிற்கு நேற்று டேவிட்டின் ஆட்டம் முக்கியமான ஒரு இன்னிங்ஸ்ஸாக மாறியது. இந்நிலையில் போட்டி முடிந்து இந்த விடயம் குறித்து பேசுகையில் டிம் டேவிட் கூறியதாவது : பந்து என்னை கடந்த போது ஏதோ ஒரு சத்தம் வந்தது போல உணர்ந்தேன். ஆனால் பந்து எனது பேட்டில் பட்டது என்று நான் நினைக்கவில்லை.

இதையும் படிங்க : காப்பாற்றிய மும்பை ! ஆட்டம் பாட்டத்தில் ஆர்சிபி வீரர் – ரசிகர்கள், இப்போவாச்சும் கோப்பை வெல்வார்களா

வேறு எதோ சத்தம் வருகிறது என்றே நினைத்தேன். உண்மையில் பந்து பேட்டில் பட்டது எனக்கு தெரியாது. அதனால் தான் முகத்தில் எந்த வித அசைவையும், ரியாக்சனும் நான் கொடுக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக நான் நேற்று அந்த பந்தில் ஆட்டமிழக்கவில்லை என்று சிரித்தபடி டிம் டேவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement