காப்பாற்றிய மும்பை ! ஆட்டம் பாட்டத்தில் ஆர்சிபி வீரர் – ரசிகர்கள், இப்போவாச்சும் கோப்பை வெல்வார்களா

RCB Celebrations Virat Kohi Glenn Maxwell
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்று கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 21-ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான 69-வது போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் ஏற்கனவே தொடர் தோல்விகளால் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த மும்பை வென்றால் மட்டுமே 5-வது இடத்தில் இருக்கும் பெங்களூரு 4-வது இடத்திற்கு முன்னேறி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற சூழ்நிலையால் அந்த அணியை சேர்ந்த வீரர்களும் ரசிகர்களும் மும்பைக்கு ஆதரவளித்தனர். அதிலும் பெங்களூரு அணி நிர்வாகத்தின் அதிகாரபூர்வ சமூக வலைதள கணக்கு தங்களது வழக்கமான சிவப்பு நிறத்தை ஊதா நிறமாக மாற்றி வெளிப்படையாகவே மும்பைக்கு ஆதரவு கொடுத்தது.

அதேபோல் குஜராத்துக்கு எதிரான தங்களது கடைசி போட்டியில் வென்ற பின் கேப்டன் டு பிளேஸிஸ், விராட் கோலி ஆகியோர் மும்பைக்கு ஆதரவு கொடுப்பதாக வெளிப்படையாகவே தெரிவித்தனர். மேலும் கிளன் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் போன்ற நிறைய பெங்களூரு நட்சத்திர வீரர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் ஏற்கனவே மும்பைக்காக விளையாடிய புகைப்படங்களைப் பதிவேற்றி மும்பைக்கு ஆதரவளிக்க அந்த அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மும்பையை தங்களது அணியாக கொண்டாடினார்கள்.

- Advertisement -

மும்பை (பெங்களூரு) வெற்றி:
மறுபுறம் 4-வது இடத்தைப் பிடித்திருந்த தங்களுக்கு இப்போட்டியில் வென்றால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் டெல்லியும் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் களமிறங்கியது. அந்த நிலைமையில் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி 20 ஓவர்களில் சுமாராக பேட்டிங் செய்து 159/7 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டேவிட் வார்னர் 5 (6) மிட்செல் மார்ஷ் 0 (1) பிரிதிவி ஷா 24 (23) சர்பராஸ் கான் 10 (7) என டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறியதால் 50/4 என திணறி அந்த அணிக்கு கேப்டன் ரிஷப் பண்ட் 39 (33) ரோவ்மன் போவல் 43 (34) அக்சர் படேல் 19* (10) என முக்கிய ரன்களை அதிரடியாக எடுத்து ஓரளவு காப்பாற்றினார்கள். மும்பை சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

அதை தொடர்ந்து 160 என்ற இலக்கை துரத்திய மும்பைக்கு ரோகித் சர்மா 2 (13) ரன்களில் ஏமாற்றினாலும் இஷான் கிசான் 48 (35) தேவாலட் ப்ரேவிஸ் 37 (33) என இளம் வீரர்கள் அதிரடியாக ரன்களை எடுத்து பெங்களூருவின் வெற்றிக்கு போராடி ஆட்டமிழந்தனர். அப்போது வான்கடே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் “ஆர்சிபி ஆர்சிபி” என விண்ணதிர முழங்கி மும்பைக்கு ஆதரவு கொடுத்த நிலையில் டிம் டேவிட் 34 (11) திலக் வர்மா 21 (17) ரமந்தீப் சிங் 13* (6) ஆகிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்களை அதிரடியாக எடுத்ததால் 19.1 ஓவர்களில் 160/5 ரன்களை எடுத்த அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஆட்டம் பாட்டம்:
அதனால் போராடித் தோற்ற டெல்லி ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுடன் வெளியேறி முதல் கோப்பையை வெல்ல வேண்டுமென்ற கனவில் தோல்வியடைந்தது. மறுபுறம் 2 நாட்களாக கொடுத்த ஆதரவும் பிரார்த்தனையும் பலித்தது போல் மும்பை வெற்றி அடைந்ததால் குஜராத், ராஜஸ்தான், லக்னோ ஆகிய அணிகளை தொடர்ந்து 4-வது அணியாக பிளே-ஆப் சுற்றுக்குள் பெங்களூரு நுழைந்தது. இந்த போட்டியை மும்பை ரசிகர்களை விட ஒரு பந்து கூட விடாமல் டாஸ் முதல் இறுதி வரை பார்த்த விராட் கோலி உள்ளிட்ட அனைத்தும் பெங்களூரு வீரர்களும் மும்பை வெற்றி பெற்றபோது தாங்கள் வென்றதைப்போல ஆரவாரமாக துள்ளி குதித்து கொண்டாடிய வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

மேலும் வரலாற்றில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தாலும் தங்களுக்காக இப்படி ஒரு வெற்றியை பரிசளித்த மும்பைக்கு விராட் கோலி உட்பட அனைத்து பெங்களூரு வீரர்களும் ரசிகர்களும் வெளிப்படையாகவே நன்றி தெரிவித்து அந்த அணியை தலை மீது வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். அத்துடன் டெல்லி வென்றால் வீட்டுக்கு கிளம்பலாம் என பெட்டி படுக்கையை ரெடியாக வைத்திருந்த அந்த அணியினர் தற்போது மே 25இல் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை எதிர்கொள்வதற்காக கொல்கத்தா புறப்பட்டு சென்றனர்.

இப்போவாச்சும்:
இந்த வருட லீக் சுற்றில் 8 வெற்றிகளைப் பெற்ற பெங்களூரு 1 வெற்றியை எக்ஸ்ட்ராவாக பெற்றிருந்தால் அடுத்தவர்களின் தயவை எதிர்பார்த்திருக்க வேண்டியதில்லை. இருப்பினும் இதுவும் நன்மைக்கே என்ற வகையில் அதிர்ஷ்டத்தின் உதவியால் மும்பை காப்பாற்றியதால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அந்த அணி இப்போதாவது கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஏனெனில் 2008 முதல் டிராவிட், கும்ப்ளே, வெட்டோரி போன்ற ஜாம்பவான்கள் தலைமையில் பல நட்சத்திர வீரர்கள் விளையாடிய போதிலும் கோப்பையை வெல்ல முடியாத அந்த அணி 2013 – 2021 வரை விராட் கோலி தலைமையில் எவ்வளவோ முயற்சித்தும் கோப்பையை கடைசிவரை முத்தமிட முடியவில்லை.

இத்தனைக்கும் பல தரமான வீரர்களை கொண்ட அந்த அணி மிகச்சிறப்பாக செயல்பட்டாலும் ஏதோ ஒரு முக்கிய தருணத்தில் சொதப்பி வெற்றியையும் கோப்பையையும் எதிரணிக்கு பரிசளித்து வருகிறது.

இதையும் படிங்க : கடைசி போட்டியிலாவது ரோஹித் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் – ஆகாஷ் சோப்ரா ஆதங்கம்

இருப்பினும் 2020, 2021 சீசன்களை தொடர்ந்து 2022இல் மும்பையின் தயவுடன் பிளே ஆப் சுற்றுக்கு ஹாட்ரிக் முறையாக தகுதி பெற்றுள்ள அந்த அணி புதிய கேப்டன் டு ப்ளேசிஸ் தலைமையில் இப்போதாவது சொதப்பாமல் முதல் கோப்பையை வெல்லுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement