கடைசி போட்டியிலாவது ரோஹித் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் – ஆகாஷ் சோப்ரா ஆதங்கம்

Aakash Chopra
- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரும் ஜாம்பவான் அணியாக பார்க்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணியானது அதிக முறை கோப்பையை கைப்பற்றிய அணியாக இருந்து வருகிறது. இதுவரை 5 முறை கோப்பையை கைப்பற்றி உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு ரோஹித் சர்மாவின் தலைமையில் ஆரம்பத்திலிருந்தே பெரிய சறுக்கலை சந்தித்து வந்தது. குறிப்பாக இந்த தொடரில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணியானது 10 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் 10-வது இடத்தை பெற்று வெளியேறியுள்ளது.

Mumbai Indians MI

- Advertisement -

கடந்த ஆண்டு இருந்த அணியில் இருந்து தற்போது பல வீரர்கள் வெளியேறியதன் காரணமாக இந்த ஆண்டு பெரிய சரிவை சந்தித்த மும்பை அணி துவக்கத்திலிருந்தே தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்ததால் இறுதி கட்டத்தில் பல இளம் வீரர்களுக்கு அந்த அணியில் மாறி மாறி விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

கிட்டத்தட்ட அணியில் இடம்பெற்றிருந்த அனைத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்க கொடுக்கப்பட்ட வேளையில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு மட்டும் கடைசிவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் டெல்லி அணிக்கு எதிரான கடைசி போட்டியிலாவது அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற தனது ஆதங்கத்தை இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Arjun

அர்ஜுன் டெண்டுல்கர் டெல்லி அணிக்கு எதிரான கடைசி போட்டியில் கண்டிப்பாக விளையாடி இருக்க வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணி அவருக்கு ஒரு வாய்ப்பினை கொடுத்திருக்கலாம். கிட்டத்தட்ட மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்ட வேளையில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கொடுப்பதற்கான நேரம் இருந்தது.

- Advertisement -

ஆனாலும் அர்ஜுனுக்கு வாய்ப்பு கிடைக்காதது சற்று வருத்தம் தான் என்று தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். ஏற்கனவே சமூக வலைதளங்களில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஒரு வாய்ப்பாவது கொடுக்க வேண்டும் என்று ஆதரவு குவித்த வேளையில் ரோகித் சர்மா அதற்கு பதிலளிக்கையில் : அணியின் காம்பினேஷன் சரியாக இருந்தால் எந்த வீரராக இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் அர்ஜுனும் வாய்ப்புக்காக சற்று காத்திருந்துதான் ஆகவேண்டும்.

இதையும் படிங்க : என்னாச்சு நம்ம ஹிட்மேனுக்கு ! வரலாற்றில் 2 மோசமான சாதனை – ரசிகர்கள் கவலை

அணியின் காம்பினேஷன் சரியாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இந்த தொடரின் இறுதி வரை அவருக்கு ஒரு வாய்ப்பு கூட கொடுக்கப்படாமல் அணியில் இருந்து வெளியே உட்கார வைக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியிலும் சற்று வருத்தத்தை ஏற்படுத்தும் விடயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement