என்னாச்சு நம்ம ஹிட்மேனுக்கு ! வரலாற்றில் 2 மோசமான சாதனை – ரசிகர்கள் கவலை

Rohit Sharma Ishan Kishan
Advertisement

ஐபிஎல் 2022 தொடரில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக பெயரெடுத்த ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் 6-வது முறையாக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரம்பத்திலேயே 8 தொடர் தோல்விகளை சந்தித்த அந்த அணி வரலாற்றிலேயே முதல் 8 போட்டிகளில் தோல்வியடைந்த முதல் அணியாக மோசமான சாதனை படைத்து லீக் சுற்றுடன் முதல் அணியாக வெளியேறியது. அதன்பின் ஒரு சில வெற்றிகளைப் பெற்ற அந்த அணி மே 21இல் தனது கடைசி லீக் போட்டியில் டெல்லியை எதிர்கொண்டது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி 20 ஓவர்களில் 159/7 ரன்கள் எடுத்தது.

Rovman Powell Jasprit Bumrah

அந்த அணியின் டேவிட் வார்னர் 5 (6) மிட்செல் மார்ஷ் 0 (1) என நட்சத்திர வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற பிரிதிவி ஷா 24 (23) சர்ப்ராஸ் கான் 10 (7) என இளம் வீரர்களும் கைகொடுத்த தவறியதால் 50/4 என்று தவித்தது. அந்த சமயத்தில் கேப்டன் ரிஷப் பண்ட் அதிரடியாக 39 (33) ரன்களும் ரோமன் போவல் 43 (34) ரன்களும் எடுக்க இறுதியில் அக்ஷர் பட்டேல் 19* (10) ரன்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றினார். மும்பை சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

மும்பை ஆறுதல்:
அதை தொடர்ந்து 160 என்ற இலக்கை துரத்திய மும்பைக்கு கேப்டன் ரோகித் சர்மா 2 (13) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிகான் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 48 (35) ரன்களும் தேவாலட் ப்ரேவிஸ் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 37 (33) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் டிம் டேவிட் 2 பவுண்டரி 4 சிக்சருடன் 34 (11) ரன்கள் எடுத்து வெற்றியை உறுதிசெய்த ஆட்டமிழக்க திலக் வர்மா 21 (17) ரமன்தீப் சிங் 13* (6) என தேவையான ரன்களை எடுத்ததால் 19.1 ஓவரில் 160/5 ரன்களை எடுத்த மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அதனால் தனது கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி அடைந்தாலும் பங்கேற்ற 14 போட்டிகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக 10 தோல்விகளை பதிவு செய்த மும்பை முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து அவமானத்துடன் வெளியேறியது. ஆனாலும் டெல்லியை தோற்கடித்து புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் தவித்த பெங்களூருவை 4-வது இடத்திற்கு முன்னேற்றி பிளே ஆப் சுற்றுக்கு அனுப்பி வைத்து தோள் கொடுக்கும் தோழனாய் செயல்பட்டதால் ஆர்சிபி வீரர்களும் ரசிகர்களும் அந்த அணியை கொண்டாடுகின்றனர். மறுபுறம் 4-வது இடத்தில் இருந்த டெல்லிக்கு வாழ்வா – சாவா என்று அமைந்த இப்போட்டியில் தோல்வியடைந்த அந்த அணி 5-வது இடத்திற்கு பின் தங்கி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பையும் இழந்து தனது முதல் கோப்பையை வெல்லும் வாய்ப்பையும் கோட்டை விட்டது.

- Advertisement -

ஹிட்மேன் ரோஹித்:
முன்னதாக இந்த வருடம் மும்பையின் தோல்விக்கான பல காரணங்களில் அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த பல வருடங்களாக எதிரணி பவுலர்களை அசால்டாக பந்தாடி ரன் மழை பொழிந்த அவரை ரசிகர்கள் ஹிட்மேன் என்று அழைக்கின்றனர். மேலும் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன் என பெயரெடுத்த அவர் அதன் காரணமாகவே இன்று இந்தியாவின் 3 வகையான அணிக்கும் கேப்டனாகும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

Rohit Sharma Duck Out

ஆனால் இந்த வருடம் ஆரம்பம் முதலே சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் மொத்தம் பங்கேற்ற 14 போட்டிகளில் 268 ரன்களை 19.14 என்ற மோசமான சராசரியில் 120.18 என்ற சுமாரான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ளார். வரலாற்றிலேயே ஒரு சீசனில் அவர் எடுத்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும்.

- Advertisement -

1. மேலும் ஹிட்மேன் என பெயரெடுத்த அவர் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வருடம் தான் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் மோசமான சாதனை படைத்துள்ளார்.

Rohit Sharma vs KKR

2. அதிலும் நேற்றைய போட்டியில் 160 என்ற எளிய துறை இலக்கைத் துரத்திய அவர் 13 பந்துகளை சந்தித்து வெறும் 2 ரன்களில் அவுட்டானார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் குறைந்தது 10 பந்துகளை எதிர்கொண்ட கேப்டன்களில் மிக குறைவான ஸ்ட்ரைக் ரேட் கொண்ட கேப்டன் என்ற பரிதாப சாதனையை அவர் படைத்தார். அந்த பட்டியல் இதோ:
1. ரோகித் சர்மா : 15.38, டெல்லிக்கு எதிராக, 2022*
2. ஜஹீர் கான் : 18.18, மும்பைக்கு எதிராக, 2017
3. விராட் கோலி : 27.27, மும்பைக்கு எதிராக, 2020

இது மட்டுமல்லாமல் கடந்த 2020, 2021 ஆகிய வருடங்களிலும் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் 400 ரன்களை தாண்டவில்லை. வரும் அக்டோபர் மாதம் டி20 உலக கோப்பை நடைபெறும் நிலையில் அதற்கு முன்பாக சமீபத்தில் இந்திய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள அவரின் இந்த சுமாரான பார்ம் இந்திய ரசிகர்களுக்கு கவலையை கொடுத்துள்ளது.

Advertisement