ரொம்ப ஹேப்பி. இதுவே போதும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த – இங்கிலாந்து ஆல்ரவுண்டர்

Eng
- Advertisement -

2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் முறையாக 50 ஓவர் சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து அணிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய சறுக்கல் ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம். ஏனெனில் பலம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட இங்கிலாந்து அணியானது அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகிறது. அண்மையில் நடைபெற்று முடிந்த ஆஷஸ் தொடர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் என தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகிறது.

wivseng

- Advertisement -

இதன்காரணமாக இங்கிலாந்து அணியின் நிர்வாகம் தற்போது மீண்டும் அந்த அணியை வலுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்காக கடந்த 2006ஆம் ஆண்டு அறிமுகமான ஆல்ரவுண்டர் டிம் பிரஸ்னன் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுவரை இங்கிலாந்து அணிக்காக 85 ஒருநாள் போட்டிகள், 34 டி20 போட்டிகள் மற்றும் 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் வேகப்பந்து வீச்சாளராக இருந்தது மட்டுமின்றி பேட்டிங்கிலும் இங்கிலாந்து அணிக்கு கை கொடுத்தார். கிட்டத்தட்ட தனது பதினாறு ஆண்டுகள் கிரிக்கெட் கரியருக்கு அவர் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Tim Bresnan

இந்நிலையில் தனது ஓய்வு குறித்து பேசியுள்ள அவர் கூறுகையில் : இந்த முடிவு எடுப்பதற்கு கடினமான ஒன்று என்றாலும் நான் சரியான நேரத்தில் இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளதாக கருதுகிறேன். ஏனெனில் நான் தொடர்ச்சியாக விளையாட நினைத்தாலும் என்னுடைய உடற்தகுதி ஒத்துழைக்கவில்லை. எனது நாட்டிற்காக நான் இவ்வளவு தூரம் விளையாடியதில் எனக்கு மிகவும் பெருமை.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியாவின் சிறந்த கேப்டன் யார்? அதிக வெற்றிகளை குவித்த டாப் 5 கேப்டன்களின் – லிஸ்ட் இதோ

நான் விளையாடிய என்னுடைய இந்த கரியர் முழுவதும் மகிழ்ச்சியுடனேயே விளையாடி இருக்கிறேன். இங்கிலாந்து அணிக்காக என்னால் முடிந்த ஒரு சிறிய பங்களிப்பை வழங்கியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய அடுத்த அத்தியாயத்தை நான் துவங்க உள்ளேன். இருப்பினும் கிரிக்கெட் சார்ந்த பணிகளையே மேற்கொள்ள உள்ளதாக டிம் பிரஸ்னன் தெரிவித்துள்ளார்.

Advertisement