இந்தியாவின் சிறந்த கேப்டன் யார்? அதிக வெற்றிகளை குவித்த டாப் 5 கேப்டன்களின் – லிஸ்ட் இதோ

Captain
- Advertisement -

இந்திய கிரிக்கெட்டின் கேப்டனாக இருந்த விராட் கோலி அந்த பதவியில் இருந்து மொத்தமாக விலகி சாதாரண வீரராக விளையாட துவங்கியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக முழுநேர வெள்ளைப்பந்து கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா விரைவில் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி தலைமையில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியா அபாரமாக செயல்பட்ட போதிலும் அவர் தலைமையில் ஒரு உலககோப்பை கூட வாங்க முடியவில்லை என்பது ஒரு மிகப்பெரிய குறையாக கருதப்படுகிறது.

- Advertisement -

கேப்டன்களின் சகாப்தம் :
கிரிக்கெட்டில் எப்போதுமே ஒரு அணிக்கு ஒருவர் நீண்ட காலமாக கேப்டன்ஷிப் செய்யும்போது அவர் தலைமையில் ஒரு சகாப்தம் உருவாகிவிடும். அதாவது நீண்ட காலமாக ஒரு அணியின் கேப்டனாக இருப்பவர் தனது திறமையால் அந்த அணிக்கு பல வெற்றி கோப்பை மற்றும் நீங்காத நினைவுகளை கொடுப்பதுடன் தரமான இளம் வீரர்களையும் வளர்த்து கொடுத்துவிட்டு செல்வார்.

ஆனாலும் காலப்போக்கில் அவை எல்லாம் மறைந்து அவர் தலைமையில் அந்த அணி எத்தனை வெற்றிகளை பெற்றது என்ற புள்ளிவிவரம் தான் வரலாற்றில் அழிக்க முடியாத ஒன்றாக இடம் பிடிக்கும். அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டில் சில கேப்டன்கள் தங்களுக்கென ஒரு சகாப்தத்தை உருவாக்கி அதில் கோலோச்சி பல வெற்றிகளைப் பெற்று கொடுத்துவிட்டு சென்றுள்ளார்கள்.

ind

சிறந்த கேப்டன் யார் :
இந்திய கிரிக்கெட்டில் தற்போது விராட் கோலியின் சகாப்தம் முடிந்து ரோகித் சர்மாவின் சகாப்தம் துவங்கியுள்ளது. அப்படிப்பட்ட இந்த வேளையில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றிகளை குவித்த டாப் கேப்டன்கள் பற்றிய புள்ளிவிவரங்களை பார்ப்போம்:

- Advertisement -

1. எம்எஸ் தோனி (2007 – 2017) : கிரிக்கெட் வரலாற்றில் ஒருவருக்கு இயற்கையாகவே கேப்டன்ஷிப் செய்யும் தலைமை பண்பு இருக்கும் என்றால் அது நிச்சயம் எம்எஸ் தோனி ஆவர். இவரை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி காலப்போக்கில் இவரை “எம்எஸ் தோனி பார்ன் டு கேப்டன்” அதாவது “எம்எஸ் தோனி கேப்டனாக பிறந்தவர்” என ஒருமுறை பார்ட்டியுள்ளார்.

dhoni

கேப்டன்ஷிப் பற்றிய முன்பின் அனுபவம் இல்லாத போதிலும் 2007ஆம் ஆண்டு இளம் வீரர்களை வைத்துக்கொண்டு தென்ஆப்பிரிக்காவில் நடந்த முதல் டி20 உலகக்கோப்பையை வென்று கட்டினார். அந்த நேரத்தில் வங்கதேசத்திடம் உதைபட்ட இந்தியாவிற்கு அது மிகப்பெரிய மருந்தாக அமைய விரைவில் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் என பல மூத்த வீரர்களை எப்படி நடத்த வேண்டும் என தெரிந்து வைத்திருந்த தோனி அவர்களை சரியாக பயன்படுத்தி 2010/11 ஆண்டில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக முன்னேற செய்தார். அதன் பின் இந்தியாவில் நடந்த 2011 உலகக்கோப்பையை அவர் தலைமையில் வென்று சரித்திரம் படைத்த இந்தியா 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை வென்று ஐசிசி உலகக்கோப்பை எனும் தாகத்தை முற்றிலுமாக தணித்துக்கொண்டது.

Dhoni-1

மொத்தத்தில் இந்தியாவுக்காக 332 போட்டிகளில் 178 வெற்றிகளை குவித்துள்ள எம்எஸ் தோனி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டனாக அபார சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

2. விராட் கோலி (2014 – 2022) :
ஏற்கனவே கூறியது போல் உலககோப்பையை வெல்லமால் போனது மட்டுமே விராட் கோலியின் கேப்டன்ஷிப்சில் உள்ள குறையாகும். மற்றபடி அனைத்து கிரிக்கெட்டிலும் அவர் தலைமையில் வெற்றி நடைபோட்ட இந்தியா வெளிநாடுகளில் 3 வகையான கிரிக்கெட்டிலும் பல சரித்திர வெற்றிகளை பெற்றது.

Kohli-1

குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நினைத்து பார்க்க முடியாத பல இமாலய வெற்றிகளை பெற்றுத்தந்த விராட் கோலி வரலாற்றிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று காட்டினார். கேப்டனாக பொறுப்பேற்றபோது 7வது இடத்தில் இருந்த இந்தியாவை தொடர்ந்து 5 வருடங்களாக உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலிக்க வைத்தது விராட் கோலியின் மிகப்பெரிய சாதனையாகும்.

மேலும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்திய அணியில் ஆக்ரோசமாக போராடும் குணத்தை உட்புகுத்திய பெருமையும் அவரை சேரும். மொத்தத்தில் 213 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி 135 வெற்றிகளுடன் இந்தியாவின் 2வது வெற்றிகரமான கேப்டனாக உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் எட்டாத இமயமாய் 40 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

Azharuddin

3. முகமது அசாருதீன் (1990 – 1999) :
ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் இந்தியாவிற்கு கிடைத்த ஒரு நல்ல கேப்டன் முகமது அசாருதீன் ஆவார். 90களில் வளர துவங்கிய சச்சின் டெண்டுல்கர் ஆரம்ப காலத்தில் இவரின் அதிகமான ஆதரவில் சிறப்பாக விளையாட துவங்கி பின்னாளில் மிகப்பெரிய ஜாம்பவானாக உருவெடுத்தார்.

இவர் 221 போட்டிகளுக்கு இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டு அதில் 104 வெற்றிகளை பெற்றுள்ளார். ஆனால் 90களின் இறுதியில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி இந்திய கிரிக்கெட்டின் பெயரை கெடுத்ததில் இவரின் பங்கு மறக்க முடியாததாகும்.

Ganguly

4. சௌரவ் கங்குலி (1999 – 2005) :
எம்எஸ் தோனி, விராட் கோலி போன்ற கேப்டன்களுக்கெல்லாம் கேப்டன் கங்குலி என்றால் மிகையாகாது. இவர் தலைமையில் இந்தியா ஒரு உலகக்கோப்பையை வெற்றி பெறவில்லை என்றாலும் வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், கௌதம் கம்பீர், ஹர்பஜன் சிங், எம்எஸ் தோனி என பல ஜாம்பவான்களை உருவாக்கி வளமான இந்தியாவிற்கு வித்திட்டவர். சொல்லப்போனால் 2011 உலகக் கோப்பையில் விளையாடிய பாதிக்கும் மேற்பட்ட வீரர்கள் கங்குலியின் மாணவர்கள் ஆவர்கள்.

இந்தியாவுக்காக 195 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 97 வெற்றிகளுடன் இந்த பட்டியலில் அவர் 4வது இடம் பிடிக்கிறார். ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற போது சூதாட்டத்தில் சிக்கி தவித்த இந்தியாவை காப்பாற்றிய கங்குலியின் கேப்டன்ஷிப் மதிப்பில்லாததாகும்.

kapildev

சிறப்பு கேப்டன் – கபில் தேவ் :
இன்று இந்தியாவில் கிரிக்கெட் இந்த அளவுக்கு ஆலமரமாய் வளர்ந்து நிற்க காரணம் முன்னாள் கேப்டன் கபில்தேவ் என்பதுதான் நிதர்சனமான உண்மை. 1983ஆம் ஆண்டு பலம் பொருந்திய வெஸ்ட் இண்டீசை சாய்த்து அவர் வென்று கொடுத்த உலகக்கோப்பை தான் இன்று இந்தியாவில் கிரிக்கெட் எனும் விளையாட்டு மிக ஆழமாக வேரூன்ற காரணமாக அமைந்தது.

அந்த உலக கோப்பை வெற்றியால் ஏற்பட்ட உத்வேகத்தால் தான் சச்சின் டெண்டுல்கர் போன்ற பல வீரர்கள் இந்தியாவில் உருவெடுத்தார்கள். எனவே கபில்தேவ் எத்தனை வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார் என குறிப்பிடுவதை விட இந்த பதிவை எழுத 1983ஆம் ஆண்டே அடித்தளம் இட்டவர் கபில்தேவ் எனக்கூறுவது தான் சரியானதாக இருக்கும்.

Advertisement