முதல் முறையா தெ.ஆ தேசிய அணிக்கு தேர்வாகிய டெவால் ப்ரேவிஸ் – திலக் வர்மா கொடுத்த ரிப்ளை

Dewald-Brevis
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான டெவால் ப்ரேவிஸ் 19 வயதுக்குட்பட்டோர் தென் ஆப்பிரிக்க அணிக்காக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். அதோடு ஐபிஎல் தொடரில் கடந்த 2022-ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இடம்பிடித்த அவர் 7 போட்டிகளில் விளையாடி 161 ரன்களையும் குவித்து அசத்தியுள்ளார். தற்போது 20 வயதான அவர் தென் ஆப்பிரிக்க தேசிய கிரிக்கெட் அணிக்காக முதல்முறையாக அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 3-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடர்கான அணியில் டெவால் ப்ரேவிஸ் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

அதேபோன்று அந்த டி20 தொடரை தொடர்ந்து நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடரானது செப்டம்பர் 7-ஆம் தேதி ஏழாம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் இளம் வீரரான ப்ரேவிஸ்க்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவருடைய நெருங்கிய நண்பரும், சக மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயருமான திலக் வர்மா அவருடன் பேசிய வீடியோ கால் பதிவினை புகைப்படமாக வெளியிட்டு அதில் அவருக்கு வாழ்த்துக்களையும் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் திலக் வர்மா குறிப்பிட்டுள்ள அந்த பதிவில் :

- Advertisement -

வாழ்த்துக்கள் சகோதரா முதல் முறையாக தேசிய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்த உனக்கு என்னுடைய வாழ்த்துக்கள். உன்னை நினைத்தால் மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே திலக் வர்மா வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் முதல்முறையாக வாய்ப்பினை பெற்று அறிமுகம் ஆகியிருந்தபோது வீடியோ கால் செய்த ப்ரேவிஸ் திலக் வர்மாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க : நாட்டுக்காக மாட்டேன்னு சொல்வேனா? சிஎஸ்கே’வுக்கு டாட்டா காட்டி – 2023 உ.கோ வெல்ல ஓய்வை வாபஸ் பெறும் இங்கிலாந்து வீரர்

அப்படி இருக்கையில் ஒருசில நாட்கள் இடைவெளியிலேயே தற்போது ப்ரேவிஸ் தென்னாப்பிரிக்க அணிக்காக இடம் பிடித்திருப்பதும் அவருக்கு திலக் வர்மா வாழ்த்து தெரிவித்ததும் தற்போது அவர்களுக்கு இடையேயான பிணைப்பை அதிகப்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி இந்த சுவாரசியமான விடயம் இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement