சி.எஸ்.கே அணியை தோக்கடிக்கனும் அதுதான் என்னோட ஆசை – மும்பை இந்தியன்ஸ் வீரரின் சவால்

cskvsmi-1
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்று முடிந்துள்ளதை அடுத்து இந்த தொடரை இந்தியாவில் நடத்துவதற்கான அனைத்து வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு கட்டமாக இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் வழக்கமாக நடைபெறும் 7 – 8 நகரங்களுக்கு பதிலாக மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள 4 மைதானங்களில் மட்டும் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Ganguly-ipl
IPL MI

அத்துடன் ஐபிஎல் 2022 தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கி வரும் மே மாதம் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வருடம் 10 அணிகள் விளையாட உள்ளதால் அனைத்து அணிகளும் குரூப் ஏ மற்றும் பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுப் போட்டிகளில் மோத உள்ளன.

- Advertisement -

திலக் வர்மா:
முன்னதாக இந்த தொடருக்காக பெங்களூருவில் நடந்த ஏலத்தில் இளம் இந்திய வீரர் திலக் வர்மாவை 1.70 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு மும்பை இந்தியன்ஸ் வாங்கியது. கடந்த 2020ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த ஐசிசி அண்டர்-19 உலககோப்பையில் இறுதிப்போட்டி வரை சென்று அசத்திய இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய இவர் இந்த ஏலத்தில் 20 லட்சம் என்ற மிகக் குறைந்த அடிப்படை விலையில் பங்கேற்றார்.

N Tilak Varma

இவரின் திறமையை உணர்ந்த சன்ரைசர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இவரை வாங்குவதற்காக ஏலத்தில் கடும் போட்டி போட்டு நிலையில் இறுதியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிகரமாக வாங்கியது. ஹைதராபாத் நகரில் பிறந்து 19வயதை கடந்துள்ள இவர் விரைவில் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பங்கேற்று பல சர்வதேச இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடி அனுபவங்களை கற்றுக் கொள்ள இருக்கிறார்.

- Advertisement -

சென்னையை புரட்ட வேண்டும்:
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடி அதில் வெற்றி பெற விரும்புவதாக திலக் வர்மா தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சென்னை அணிக்கு எதிராக விளையாட விரும்புகிறேன். ஏனெனில் அந்த அணியில் விளையாடும் எம்எஸ் தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை மிகவும் நீண்ட நாட்களாக ரசித்துக் கொண்டு வருகிறேன். எனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெறுவது எனக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கை அளிக்கும்” என கூறியுள்ளார்.

tilak varma

அதே சமயம் ஐபிஎல் தொடரில் சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் அடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடுவது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங் செய்ததை நான் பார்த்து வளர்ந்தேன். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒருநாள் விளையாட வேண்டும் என்பது எனது சிறுவயது கனவாகும்.

- Advertisement -

எனவே அது ஒரு மிகச் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் என்பதால் மும்பை அணியில் விளையாடுவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். கடினமான நேரங்களில் துவண்டுவிடாமல் மீண்டெழுந்து கோப்பையை வெல்லும் ஒரு தனித்துவமான குணம் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் உள்ளது. அந்த அணி தோற்பது போல் தெரிந்தால் கூட எப்படியாவது வெற்றி பெறும் வழியை கண்டறிவார்கள். எனவே இந்த அணியில் ஏதோ ஒன்று வித்தியாசமாக உள்ளது என்பது எனக்கு எப்போதுமே ஒரு உத்வேகத்தை அளிக்கிறது” என கூறினார்.

tilak varma 1

எவ்வளவு தைரியம்:
மும்பைக்காக விளையாடி சென்னையை வீழ்த்த வேண்டும் என்ற திலக் வர்மாவின் இந்த ஆசையை பார்த்த பல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் இன்னும் ஐபிஎல் தொடரில் காலடி கூட எடுத்து வைக்கவில்லை அதற்குள் சென்னை அணியை தோற்கடிக்க தைரியம் வந்து விட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் எப்படி பரம எதிரிகளோ அதேபோல ஐபிஎல் தொடரில் மும்பையும் சென்னையும் பரம எதிரிகள் என அனைவரும் அறிவோம்.

- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 5 கோப்பைகளை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் 4 கோப்பைகளை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதும் போட்டிகள் என்றாலே அதில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் அனல் பறக்கும். அதை விட அந்தப் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் முழுமூச்சுடன் போராடுவார்கள்.

இதையும் படிங்க : இலங்கை டி20 தொடர் : மீண்டும் ஒரு வைட்வாஷ் வெற்றியால் இந்தியா படைத்த பிரம்மாண்ட 2 உலகசாதனைகள் இதோ

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் இன்னும் காலடி வைக்காவிட்டாலும் கூட சென்னையை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் இளம் வீரர் திலக் வர்மாவுக்கு ஏற்படுவது இயற்கையான ஒன்று என மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Advertisement