இலங்கை டி20 தொடர் : மீண்டும் ஒரு வைட்வாஷ் வெற்றியால் இந்தியா படைத்த பிரம்மாண்ட 2 உலகசாதனைகள் இதோ

- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியன்று லக்னோவில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா பிப்ரவரி 26ஆம் தேதியன்று தரம்சாலாவில் நடைபெற்ற 2வது போட்டியிலும் அபாரமாக செயல்பட்டு 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IND

- Advertisement -

இதன் காரணமாக 2 – 0* என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றிய இந்தியா இன்று அதே தரம்சாலா மைதானத்தில் நடந்த சம்பிரதாய கடைசி 3வது டி20 போட்டியில் இலங்கையை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை களமிறங்கிய அந்த அணியின் டாப் 4 வீரர்கள் இந்தியாவின் அதிரடியான ஓப்பனிங் பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானார்கள். அடுத்து வந்த முக்கிய வீரர் தினேஷ் சண்டிமால் 22 ரன்களில் நடையை கட்ட அந்த அணி 60/5 என ஆரம்பத்திலேயே தடுமாறியது.

காப்பாற்றிய கேப்டன் சனாகா:
இதனால் படுமோசமான தொடக்கம் பெற்ற இலங்கை அணியை அடுத்து களமிறங்கிய கேப்டன் தசுன் சனாகா தம்மால் முடிந்தவரை காப்பாற்ற போராடினார். ஆரம்பத்தில் நிதானமாக பேட் செய்யத் துவங்கிய இவர் நேரம் செல்ல செல்ல இந்திய பந்துவீச்சாளர்களை பந்தாடி வெறும் 38 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட அரைசதம் அடித்து 74* ரன்கள் விளாசி தடுமாறிய இலங்கையை தூக்கி நிறுத்தினார் என்றே கூறலாம். இதனால் ஒரு கட்டத்தில் 100 ரன்களைக் கூட என்ற நிலையில் இருந்த அந்த அணி 20 ஓவர்களில் 146/5 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக அவேஷ் கான் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

bumrah

இதை தொடர்ந்து 147 என்ற இலக்கை துரத்திய இந்தியாவிற்கு தொடக்க வீரர் கேப்டன் ரோகித் சர்மா 5 ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றமளிக்க அவருடன் ஜோடியாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 18 (12) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் பட்டையை கிளப்பிய ஸ்ரேயாஸ் அய்யர் மீண்டும் இந்த போட்டியில் அதிரடியாக இலங்கை பந்துவீச்சாளர்களை வெளுத்துவாங்கினார். தொடர்ந்து மிரட்டிய அவர் கடைசி வரை நின்று இந்த தொடரில் தொடர்ந்து 3வது அரை சதத்தை கடந்து 45 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உட்பட 73* ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

- Advertisement -

அவருடன் கடைசியில் ஜடேஜா 22* (15) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 16.5 ஓவர்களில் 148/4 ரன்கள் எடுத்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் அபார வெற்றி பெற்றது. இதன் வாயிலாக 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னை உலகின் நம்பர் ஒன் டி20 என நிரூபித்துள்ளது.

shreyas iyer 1

புதிய உலகசாதனை:
மேலும் இந்த வெற்றியின் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற புதிய உலக சாதனையை இந்தியா படைத்தது. இதுநாள் வரை டி20 போட்டிகளில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பதிவு செய்த அணியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 2 அணிகளும் தலா 16 வெற்றிகளுடன் இந்த உலக சாதனையை பகிர்ந்து கொண்டிருந்தன. ஆனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் வாயிலாக பாகிஸ்தானை முந்தியுள்ள இந்தியா புதிய உலக சாதனை படைத்துள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பதிவு செய்த அணிகள் இதோ:
1. இந்தியா : 17* வெற்றிகள், இலங்கைக்கு எதிராக.
2. பாகிஸ்தான் : 16 வெற்றிகள், ஜிம்பாப்வேவுக்கு எதிராக.

- Advertisement -

இது மட்டுமல்லாமல்  “சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற அணி என்ற ஆப்கானிஸ்தான் மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளின் உலக சாதனையை இந்தியா (12 வெற்றிகள்) சமன் செய்து அசத்தியுள்ளது”. கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு துபாயில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் இந்தியா தோற்றது.

Thakur

அதன்பின் ஆப்கானிஸ்தான், நமிபியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக விராட் கோலி தலைமையிலான இந்தியா 3 வெற்றிகளை பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 – 0 என வைட்வாஷ் வெற்றியுடன் கைப்பற்றியது. அதன்பின் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டி20 தொடரையும் 3 – 0 என வைட்வாஷ் செய்த இந்தியா தற்போது இலங்கைக்கு எதிராக மீண்டும் 3 – 0 என வைட்வாஷ் வெற்றியை 3 ஹாட்ரிக் கோப்பைகளை ருசித்துள்ளது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : ப்ளே ஆப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் போவது கஷ்டம் தான். ஏன் தெரியுமா? – ஆகாஷ் சோப்ரா விளக்கம்

இப்படி தொடர்ச்சியாக பெற்ற 12 வெற்றிகளின் வாயிலாக இந்த புதிய உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதே சாதனையை ஏற்கனவே ஆப்கானிஸ்தான் மற்றும் ருமேனியா போன்ற கத்துக்குட்டி அணிகள் அதைவிட சிறிய கத்துக்குட்டிகள் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்று படைத்துள்ளது. ஆனால் இந்த மகத்தான சாதனை படைத்த பலம் பொருந்திய அணியாக தற்போது இந்தியா சாதித்துள்ளது.

Advertisement