ஐபிஎல் 2022 : ப்ளே ஆப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் போவது கஷ்டம் தான். ஏன் தெரியுமா? – ஆகாஷ் சோப்ரா விளக்கம்

Chopra
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரை இந்தியாவில் நடத்துவதற்கு தேவையான அனைத்து வேலைகளிலும் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. அதில் முதல்கட்டமாக இதன் லீக் சுற்று போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலத்திலும் நாக்அவுட் சுற்று போட்டிகள் குஜராத் மாநிலத்திலும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்த வருடம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ மற்றும் குஜராத் ஆகிய 2 அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கு பெறுவதால் வழக்கமாக நடைபெறும் 60 போட்டிகளுக்கு பதில் 74 போட்டிகள் கொண்ட ஐபிஎல் நடைபெற உள்ளது. இதில் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று தொடர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது.

Ganguly-ipl
IPL MI

குரூப் ஏ பிரிவில் மும்பை இந்தியன்ஸ்:
அதிலும் குறிப்பாக மும்பையில் உள்ள புகழ்பெற்ற வான்கடே மைதானம், டிஒய் பாட்டில் மைதானம் மற்றும் ப்ராபோர்ன் ஆகிய மைதானங்களை சேர்த்து புனே நகரில் இருக்கும் எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் இந்த வருடத்திற்கான 70 லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ளன. அதைத் தொடர்ந்து நடைபெறும் ப்ளே ஆப் சுற்று குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது. இவ்வருடம் வழக்கத்திற்கு மாறாக அனைத்து 10 அணிகளும் தலா 5 அணிகள் கொண்ட குரூப் ஏ மற்றும் பி ஆகிய 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதில் குரூப் ஏ பிரிவில் இருக்கும் ஒரு அணி தனது லீக் சுற்றில் அதே பிரிவில் இருக்கும் இதர 4 அணிகளுடன் தலா 2 போட்டிகளிலும் குரூப் பி பிரிவில் தனக்கு நேர் எதிராக உள்ள அணியுடன் 2 போட்டிகளிலும் மோத வேண்டும். அத்துடன் குரூப் பி பிரிவில் இருக்கும் எஞ்சிய 4 அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி இதற்கு முன் எத்தனை கோப்பைகள் வாங்கியுள்ளன மற்றும்  எத்தனை பைனலில் விளையாடியுள்ளன என்பதன் அடிப்படையில் இந்த குரூப் பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 5 கோப்பைகளை வென்று ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ள மும்பை இந்தியன்ஸ்
குரூப் ஏ பிரிவில் முதல் அணியாக இடம் பிடித்துள்ளது.

mumbai

பிளே ஆப் போவது கஷ்டம்:
இந்நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐபிஎல் பார்மட் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் இடம் வகிக்கும் குரூப் ஏ பிரிவு மிகவும் கடினமாக உள்ளதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா குற்றம் சாட்டியுள்ளார். இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகளுடன் மும்பை இந்தியன்ஸ் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும். அத்துடன் சென்னை அணியுடனும் 2 போட்டியில் மோத வேண்டும். அதாவது கடினமான அணிகளுக்கு எதிராக 2 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் விளையாட உள்ள நிலையில் ஹைதெராபாத், பெங்களூரு, பஞ்சாப், குஜராத் போன்ற பலம் குறைந்த அணிகளுடன் தலா 1 போட்டியில் மட்டும் மோத உள்ளது.

- Advertisement -

இதனால் மும்பை அணி மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். அதேசமயம் கொல்கத்தா, மும்பை, டெல்லி, லக்னோ, ராஜஸ்தான் ஆகிய கடினமான அணிகளுடன் தலா 1 முறை மட்டும் மோத உள்ள ஹைதராபாத் அணியை பாருங்கள். வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி இந்த பார்மட் காரணமாக குரூப் ஏ கடினமாக உள்ளது” என கூறியுள்ள அவர் குரூப் ஏ பிரிவு கடினமாக இருப்பதால் இந்த முறை மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு எளிதாக செல்வது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் என கணித்துள்ளார்.

chopra

ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளில் இதுபோன்ற பார்மட் காலம் காலமாக இருந்து வரும் நிலையில் ஆகாஷ் சோப்ரா இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டை எழுப்புவது எந்தவித நியாயமும் இல்லை என்றே கூறலாம். ஏனெனில் கிரிக்கெட்டில் அதுவும் டி20 போட்டிகளில் பலம் மற்றும் பலமற்ற அணிகள் என எதுவும் இல்லை. மேலும் கடினமான அணிகளுக்கு எதிராக பெறுவதுதான் உண்மையான வெற்றி என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க : சர்வதேச டி20 அரங்கில் மாபெரும் உலகசாதனையை படைத்து உச்சத்திற்கு சென்ற – ரோஹித் சர்மா

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “இதனால் ஒவ்வொரு குரூப்பில் இருக்கும் டாப் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது. லீக் சுற்றில் 14 போட்டிகளின் முடிவில் பெறும் புள்ளிகளை பொறுத்தே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். ஏனெனில் லீக் சுற்றில் ஒரு அணி குறைந்தபட்சம் அனைத்து அணிகளுடனும் ஒருமுறை மோதி இருக்கும். இந்த முறை உலககோப்பைகளில் பயன்படுத்த பட்டாலும் கூட இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை” என கூறினார்.

Advertisement