சர்வதேச டி20 அரங்கில் மாபெரும் உலகசாதனையை படைத்து உச்சத்திற்கு சென்ற – ரோஹித் சர்மா

Rohith
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அதிரடி துவக்க வீரராக வலம் வரும் தற்போதைய பேட்ஸ்மேன்களில் மிக முக்கியமானவர் மற்றும் அபாயகரமான பேட்ஸ்மேன் யாரென்றால் நிச்சயம் அனைவரும் கூறும் பெயராக ரோஹித் சர்மா இருப்பார். அந்த அளவிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் அவர் ஓப்பனாக களமிறங்கியதில் இருந்து மிகவும் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 2007 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகிய ரோகித் சர்மா துவக்கத்தில் மிடில் ஆர்டரில் விளையாடினாலும் கடந்த பல ஆண்டுகளாக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடி வருகிறார்.

Rohith

- Advertisement -

அதோடு மட்டுமில்லாமல் முன்னாள் கேப்டன் விராட் கோலி அனைத்து விதமான கேப்டன் பதவியில் இருந்தும் விலகியதை தொடர்ந்து இந்திய அணியின் புதிய கேப்டனாக தற்போது ரோகித் சர்மா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் பங்கேற்றதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் டி20 அரங்கில் ஒரு வீரராக ரோகித் சர்மா மாபெரும் உலக சாதனை ஒன்றை நிகழ்த்தி அசத்தியுள்ளார். அவரது 15 ஆண்டுகால உழைப்பிற்கு கிடைத்த பரிசாக இந்த போட்டி அவருக்கு அமைந்துள்ளது.

அந்த சாதனை யாதெனில் கடந்த 2007-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான ரோஹித் கடந்த போட்டி வரை 124 போட்டிகளில் விளையாடி 3308 ரன்கள் குவித்து இருந்தார். அதோடு சர்வதேச டி20 அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடி இருந்த பாகிஸ்தான் அணியின் வீரர் சோயப் மாலிக்குடன் 124 போட்டிகளுடன் அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரராக சமநிலையில் இருந்தார்.

Rohith

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான இந்த மூன்றாவது டி20 போட்டியில் பங்கேற்றதன் மூலம் அதிக டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனை பட்டியலில் தற்போது ரோகித் சர்மா 125 போட்டிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடத்தில் சோயப் மாலிக் 124 போட்டிகளும், முகமது ஹபீஸ் 119 போட்டிகளும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் 115 போட்டிகளுடன் நான்காவது இடத்திலும், பங்களாதேஷ் அணியின் வீரரான முகமதுல்லா 113 போட்டிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். இந்த இந்த பட்டியலில் விராட் கோலி 97 போட்டிகளுடன் 14-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்தியா போராடி பெற்ற வெற்றியை தோல்வி என அறிவித்த ஐசிசி, குழம்பிய ரசிகர்கள் – என்ன நடந்தது?

2007 ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகிய ரோஹித் சர்மா தோனி தலைமையிலான இந்திய அணியில் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார். தற்போது அவர் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் கேப்டனாக உயர்ந்துள்ளார். அதோடு மட்டுமின்றி டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் ரோகித் சர்மாவே முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement