ஆசிய கோப்பை இல்லாமலே கொண்டாட ஐடியா கொடுத்ததே அவர்தான் – திலக் வர்மா பகிர்ந்த தகவல்

Tilak Varma
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இந்திய அணியானது ஒன்பதாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியானது துபாய் மைதானத்தில் நடைபெற்ற வேளையில் அந்த போட்டி முடிந்து பரிசளிப்பு விழாவின் போது இந்திய அணியிடம் கோப்பை முறையாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கோப்பை இல்லாம கொண்டாட ஐடியா குடுத்தாதே அவர்தான் : திலக் வர்மா

ஆனால் இம்முறை இறுதிப்போட்டியை வென்ற பின்னர் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொசின் நக்வி அந்த கோப்பையை வழங்க இருந்ததால் அதனை ஏற்றுக் கொள்ள சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மறுத்தது. அதனால் மோசின் நக்வி அந்த கோப்பையை இந்திய அணிக்கு வழங்காமல் தன்னுடனே எடுத்துச் சென்று விட்டார்.

- Advertisement -

இந்திய அணி வீரர்கள் எவ்வளவோ நேரம் காத்திருந்தும் அவர்களுக்கு வேறு நிர்வாகிகளின் கையால் அந்த கோப்பையை வழங்க அவர் மறுத்துவிட்டார். எனவே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து இந்திய அணி ஆசிய கோப்பையின்றி வெற்றியை அங்கு கொண்டாடிவிட்டு பின்னர் நாடு திரும்பியது. அதன்பின்னர் இந்த டிராபி இந்திய அணிக்கு வழங்கப்படுமா? வழங்கப்படாதா? என்ற பேச்சு இருந்து வருகிறது.

அதேவேளையில் ஆசிய கோப்பை டிராபி வேண்டுமென்றால் நவம்பர் 10-ஆம் தேதி துபாயில் நிகழ்ச்சி வைத்திருப்பதாகவும் அதற்காக சூர்யாகுமார் யாதவும், அவரது வீரர்களும் வந்து கலந்து கொண்டால் என் கையால் தான் கோப்பையை வழங்குவேன் இல்லையென்றால் முடியாது என்பது போன்று மோசின் நக்வி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

- Advertisement -

இந்நிலையில் இறுதிப்போட்டி முடிந்த பின்னர் தாங்கள் எவ்வாறு அந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டோம்? என்பது குறித்த சில தகவல்களை திலக் வர்மா வழங்கி பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நாங்கள் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தோம். மோசின் நக்வி கையால் அந்த கோப்பையை வாங்க விரும்பாத நாங்கள் வேறு யாராவது நிர்வாகிகள் மூலம் கோப்பை வழங்கப்படும் என்று நினைத்தோம். அதற்காக மைதானத்திலேயே நங்கள் படுத்திருந்ததை கூட நீங்கள் பார்த்திருக்க முடியும்.

இதையும் படிங்க : இந்தியாவின் தரமான புராடக்ட் இவர்தான்.. அசத்தலா ஆடுறாரு.. இளம் வீரரை பாராட்டிய – ரவிச்சந்திரன் அஷ்வின்

ஆனால் நீண்ட நேரமாகியும் கோப்பை அங்கு கொண்டுவரப்படவில்லை. எனவே அந்த நேரத்தில் அர்ஷ்தீப் சிங் தான் எங்களிடம் வந்து ஒரு ஐடியா கொடுத்தார். அதாவது கோப்பையே இன்றி நாம் கொண்டாடலாம் வாருங்கள் என்று சொன்னார். அதன்பின்னர் அவர் கூறியது போன்று கோப்பையின்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு அதன் பின்னர் நாங்கள் ஹோட்டல் அறைக்கு திரும்பியதாக திலக் வர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement